கடந்த சில மாதங்களுக்கு முன்பே ஜெயம் ரவி அவருடைய மனைவியை பிரியப் போகிறார் என்று கிசுகிசு வெளியான நிலையில் திடீரென இரண்டு வாரங்களுக்கு முன்பு மனைவி ஆர்த்தியை பிரிய முடிவு எடுத்திருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். விவாகரத்து செய்தியை அறிவித்ததைத் தொடர்ந்து அவருடைய பெயர் தான் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
அதனைத்தொடர்ந்து சில தினங்களில், நானும் என்னுடைய குழந்தைகளும் தவித்து வருகிறோம். என் தரப்பு நியாயத்தை அவரிடம் சொல்ல வேண்டும் என்று முயற்சி செய்கிறேன். ஆனால் அது முடியவில்லை என்று ஆர்த்தி அறிக்கை வெளியிட்டிருந்தார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். அதனைத்தொடர்ந்து, ஜெயம் ரவி விவாகரத்துக்கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த சூழலில் தற்போது ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தன் சார்பில் விளக்கமளித்துள்ளார். “என் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக பரப்பப்படும் அவதூறுகளை பார்த்து நான் அமைதியாக இருப்பது குற்றவுணர்வினால் இல்லை. இந்த விஷயத்தின் முடிந்த அளவிற்கு என்னுடைய தன்மானத்தை நான் பாதுகாக்க முடிவு செய்திருக்கிறேன். உண்மையை மறைக்க என்னை தவறாக சித்தரிக்கிறார்கள்.
சட்டத்தின் அடிப்படையில் எனக்கு நியாயம் கிடைக்கும் என நான் நம்புகிறேன். திருமணம் என்கிற பந்தத்தை நான் ரொம்பவும் மதிக்கிறேன். இது பற்றி பொதுவெளியில் பேசி யாருடைய மனதையும் நான் புன்படுத்த விரும்பவில்லை. என்னுடைய குடும்பத்தின் நலமே எனக்கு முக்கியம்” என ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜெயம் ரவி அளித்த ஒரு பேட்டி வைரலானது. அது என்னவென்றால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயம் ரவி வாட்ஸ்அப் பயன்படுத்திக்கொண்டு இருந்தாராம். அப்போது யார் மெசேஜ் அனுப்பினாலும் முதலில், ஆரத்தி அவருடைய போனை வாங்கி யார் மெசேஜ் செய்திருக்கிறார் என்பதைப் பார்த்துவிட்டு அதன் பிறகு, தான் ஜெயம் ரவியிடம் கொடுப்பாராம். வாட்ஸ்அப்பில் மட்டும் இன்ஸ்டாகிராம் பாஸ்வேர்ட் கூட ஆர்த்தியின் கட்டுப்பாட்டில் தான் இருக்குமாம்.
அடிக்கடி, ஜெயம் ரவி கணக்கிலிருந்து அவருடைய மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகும். அந்த புகைப்படங்களை ஜெயம் ரவி கணக்கிலிருந்து ஆர்த்தி தான் வெளியிடுவாராம். இதனால் பல சமயங்களில் ஜெயம் ரவி கண்கலங்கி அழுதிருக்கிறாராம். அத்துடன், ஜெயம் ரவி நடித்துச் சம்பாதித்த பணத்தை மனைவி ஆர்த்தி தான் செலவழிப்பதாகவும், ஆனால், நான் ஏதாவது வாங்கினால், நான் ஏன் அதைச் செய்தேன் என்று என்னிடம் சண்டையிடுவாள். ஆர்த்தியின் அம்மா ஜெயம் ரவியை வைத்து மூன்று படங்களைத் தயாரித்திருந்தாலும், அதிலிருந்து தனக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
Read more ; மீண்டும் அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு சிக்கல்.. செக் வைத்த உச்ச நீதிமன்றம்..!!