ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் கொடுக்க முடியாத விலைக்கு பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், தினசரி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகைகளை கொடுக்கிறது. இந்தியாவில் 4ஜி சேவைகளை விரைவில் தொடங்க இருக்கும் பிஎஸ்என்எல் நிறுவனம், இன்றளவும் மற்ற நிறுவனங்களைவிட மலிவான விலையிலேயே திட்டங்களை தொடர்ந்து வருகிறது. இது 4ஜி சேவைக்கு பின்பு மாற வாய்ப்பில்லை என்றும் டெலிகாம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில் 2 ப்ரீபெய்ட் திட்டங்கள் ஒட்டுமொத்த பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களையும் கவர்கிறது. BSNL இன் இந்த திட்டம் அடிப்படை நன்மைகளை விட அதிகமாக வழங்குகிறது. திட்டத்தின் விலை வெறும் ரூ.108 ஆகும். பிஎஸ்என்எல்-இன் ரூ.108 திட்டமானது 28 நாட்கள் சேவை செல்லுபடியாகும். வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 1GB தினசரி டேட்டாவை உள்ளடக்கியது. இந்த திட்டத்தில் SMS பலன்கள் இல்லை.
உள்ளூர் எஸ்எம்எஸ்களுக்கு ஒரு எஸ்எம்எஸ்ஸுக்கு 80 பைசா வசூலிக்கப்படுகிறது, அதே சமயம் தேசிய எஸ்எம்எஸ்களுக்கு ரூ. 1.20 வசூலிக்கப்படுகிறது. பிஎஸ்என்எல்-ல் இருந்து மற்ற 28 நாள் திட்டங்களும் உள்ளன. அவற்றில் ஒன்று ரூ.107க்கான திட்ட வவுச்சர் ஆகும், இது 35 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களிலும் கிடைக்கிறது. இந்த திட்டம் 3 ஜிபி இலவச டேட்டா, 200 நிமிட இலவச குரல் அழைப்பு மற்றும் 35 நாட்களுக்கு பிஎஸ்என்எல் டியூன்களை வழங்குகிறது.
Read more ; கடனை கட்டும் முன்பே கடன் வாங்கியவர் இறந்துவிட்டால், அதை யார் செலுத்த வேண்டும்? – முழு விவரம் இதோ..!!