fbpx

திருச்சி ஜம்புகேஸ்வர் கோயிலில் வேலை!… மாதம் ரூ.58,600 வரை சம்பளம்!… தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும்!

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வர் கோயிலில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தட்டச்சர், உதவி மின்பணியாளர், காவலர்
பெருக்குபவர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தட்டர் பணியிடத்திற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது இளநிலை தட்டச்சர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உதவி மின்பணியாளர் பணிக்கு எலக்ட்ரிக்கல் துறையில் ஐ.டி.ஐ. படித்திருக்க வேண்டும். காவலர், பெருக்குபவர் பணிக்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தட்டச்சர் பணிக்கு மாதம் ரூ.18,500-58,600 சம்பளம். இதேபோல் உதவி மின்பணியாளர் ரூ.16,600-52,400, காவலர் ரூ.15,900-50,400, பெருக்குபவர் ரூ.15,900-50,400 சம்பளம் வழங்கப்படும்.

https://thiruvanaikavaljambukeswarar.hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=25706 – மற்றும் https://hrce.tn.gov.in//hrcehome/index.php – என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். திருவானைக்கோவிலில் உள்ள அலுவலகத்திலும் விண்ணப்ப படிவத்தைப் பெற்றுகொள்ளலாம். விண்ணப்பத்தை அஞ்சலிலும் அனுப்பலாம்; நேரில் அலுவலகத்திற்கு சென்றும் அளிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உறையில் பணியிடை வரிசை எண், மற்றும் – பணியிடத்திற்கான விண்ணப்பம்” என தெளிவாக குறிப்பிட்டு உதவி ஆணையர்/செயல் அலுவலர். அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருவானைக்காவல், திருவரங்கம் வட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 620005″ என்ற முகவரிக்கு நேரிலோ/அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும் ரூ.25/- மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடனும் அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியவைகள்: பிறந்த தேதியை சரிபார்க்க பள்ளி சான்று நகல் ஆதார்அட்டை நகல், இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதை நிரூபிக்க சாதி சான்றுநகல், கல்வி சான்று நகல் (கலம் 11 மற்றும் 12 ல் உள்ளவாறு), நன்னடத்தைச்சான்று (கலம் 14- ல் உள்ளவாறு), நன்னடத்தைச்சான்று (கலம் 15 ல் உள்ளவாறு), அனுபவ சான்று நகல்சுயவிலாசமிட்ட ரூ. 25 மதிப்புள்ள அஞ்சல் தலை ஒட்டிய அஞ்சல் உறை ஒன்று. விண்ணப்பிக்க கடைசி தேதி – 11.05.2023 ஆகும்.

Kokila

Next Post

8ம் வகுப்பு படித்தவரா நீங்கள்?... மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் வேலை! ரூ.50,000 வரை மாத ஊதியம்!...

Thu Apr 20 , 2023
மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரத்தை இங்கே காணலாம். மயிலாடுதுறை மாவட்டம் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி (சைக்கிள்) ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 01.01.2023- இன் படி பொதுப்பிரிவினர் 34 […]

You May Like