தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பில் காலியாக உள்ள ஏழு இடங்களை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்பதாக தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை அறிவித்திருக்கிறது. இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் தர்மபுரியில் பணியமறுத்தப்படுவார்கள். அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவர்களது வயது வரம்பு 18 வயதிலிருந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்தப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஊதியமாக 15 ஆயிரத்து 700 ரூபாய் முதல் ஐம்பதாயிரம் ரூபாய் வரை சம்பளமாக வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கு தபால் மூலமாகவே விண்ணப்பிக்க முடியும். மேலும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 11.03,2023 தேதிக்குள் விண்ணப்பங்கள் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கட்டணங்கள் எதுவும் இல்லை. விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை இந்து சமய மற்றும் அறநிலைய அறக்கட்டளை, 119, உத்தமர் காந்தி சாலை, சென்னை 600034 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய பெரு தகவல்களை அறிய hrce.tn.gov.in என்ற முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.