தமிழ்நாடு அரசின் காலநிலை மாற்றத் துறையில் காலியாக உள்ள 10 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது . இதன்படி ப்ராஜெக்ட் அசோசியேட் பெர்சனல் அசிஸ்டன்ட் அக்கவுண்டன்ட் டேட்டா மேனேஜ்மென்ட் அசிஸ்டன்ட் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பில் சேர விரும்புவோர் 16.02 2023 இல் இருந்து 20.02.2023 தேதிக்குள் தமிழ்நாடு அரசின் காலநிலை மாற்றத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த வேலைவாய்ப்பில் ப்ராஜெக்ட் அசோசியேட் பணிகளுக்கு 4 காலியிடங்களும் அக்கவுண்டண்ட் பணிகளுக்கு 1 காலியிடமும் டேட்டா மேனேஜ்மென்ட் அசிஸ்டன்ட் பணிகளுக்கு 4 காலியிடங்களும் பெர்சனல் அசிஸ்டன்ட் பணிகளுக்கு 1 காலியிடமும் என மொத்தம் பத்து காலியிடங்கள் உள்ளன . இதில் ப்ராஜெக்ட் அசோசியேட் பணிகளுக்கு கல்வி தகுதியாக எம் பி ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும் . அக்கவுண்டண்ட் பணிகளுக்கு கல்வித் தகுதியாக எம் காம் அல்லது பிகாம் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருடங்கள் கணக்காளராக பணியாற்றிய அனுபவமும் இருக்க வேண்டும். டேட்டா மேனேஜ்மென்ட் அசிஸ்டன்ட் பணிகளுக்கு கம்ப்யூட்டர் பற்றி தெரிந்து இருக்க வேண்டும் மேலும் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு சான்றிதழ் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும். பர்சனல் அசிஸ்டன்ட் பணிகளுக்கு ஏதேனும் ஒரு நிலங்களை பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இவற்றுடன் கூடுதலாக தட்டச்சு சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.
இந்த வேலை வாய்ப்புகளுக்கான வயது வரம்பு பற்றிய எந்த அறிவிப்பும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. இந்த வேலைவாய்ப்பில் ப்ராஜெக்ட் அசோசியேட் பணிகளுக்கு ஊதியமாக 60,000 ரூபாயும் அக்கவுண்டன்ட் பணிகளுக்கு ஊதியமாக 30,000 ரூபாயும் டேட்டா மேனேஜ்மென்ட் அசிஸ்டன்ட் பணிகளுக்கு ஊதியமாக 25.000 ரூபாயும் பர்சனல் அசிஸ்டன்ட் பணிகளுக்கு ஊதியமாக 25,000 தமிழ்நாடு அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது . இந்த வேலை வாய்ப்பிற்கு போட்டித் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அந்த இணையதள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு களில் சேர விரும்புவோர் 20.02.2023 தேதிக்குள் தமிழ்நாடு அரசின் காலநிலை மாற்றத்துறையின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய விபரங்களை அறிய www.environment.tn.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.