சிவில் போக்குவரத்து துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் விவரம் :
பணி: Junior Executive (Architecture) – 3
பணி: Junior Executive (Engineering Civil) – 90
பணி: Junior Executive (Engineering Electrical) – 106
பணி: Junior Executive (Electronics) – 278
பணி: Junior Executive (Information Technology) – 13
கல்வித்தகுதி : காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறையில் பொறியியல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். கணினித் துறையில் எம்சிஏ முடித்திருப்பவர்களும் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : மாதம் ரூ.40,000 – ரூ.1,40,000 வரை வழங்கப்படும்.
வயதுவரம்பு : 1.5.2024 தேதியின்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை உண்டு.
தேர்வு முறை : GATE-2024 தேர்வு மதிப்பெண் மற்றும் தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.300 ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : www.aai.aero என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 1.5.2024