பொதுத்துறை வங்கிகளில் 4,455 துணை மேலாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வங்கி பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வரும் 21ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நிலைத் தேர்வு அக்டோபர் மாதமும், அதில் தேர்வு செய்யப்படுவோருக்கான முதன்மைத் தேர்வு வரும் நவம்பர் மாதமும் நடைபெறவுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், 20 வயது முதல் 30 வயது வரையிலானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கவும், மேலும் தெரிந்துகொள்ளவும் www.ibps.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : நீங்க கார் வாங்கப் போறீங்களா..? அப்படினா இந்த விஷயங்களை செக் பண்ணுங்க..!!