பெல் நிறுவனத்தில் ரூ.1,40,000 சம்பளத்தில் அரசு வேலை அறிவிக்கப்பட்டுள்ளது. பி.இ மற்றும் பி.டெக் படித்து முடித்த தகுதி உள்ளவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
பாரத் எலக்ட்ட்ரானிக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் டெபுட்டி இஞ்சினியர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு பற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 24 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்முள்ளவர்கள் ஆன்லைன் மூலமாகவோ 06.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு இதில் கூறப்பட்டுள்ளது.
நிறுவனம் – பாரத் எலக்ட்ட்ரானிக்ஸ் லிமிட்டெட்
பணி – Deputy engineer /E-II Grade
பணியிடங்கள் – 24
விண்ணப்பிக்க கடைசி தேததி – 06 .10. 2022
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்
பெல் நிறுவன காலிப்பணியிடங்கள்
வயது வரம்பு – Deputy engineer /E-II Grade பதவிக்கு காலியாக உள்ள 24 பணயிடங்களை நிரப்ப 01.09.2022 தேதியின் படி , விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு 3 வருடங்கள் எஸ்.சி (அ) எஸ்.டி பிரிவினருக்கு 05 வருடங்களும் அதிகப்பட்ச வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
கல்வி- அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.E/B.Tech/ B.sc பொறியியல் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கட்டண விவரம் – மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் ரூ.600 + 18% GST = ரூ.708/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஊதியம் – இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 14.09.2022 முதல் 06.10.2022 வரை விண்ணப்பிக்கலாம்