fbpx

தினமும் இந்த சிம்பிள் விஷயத்தை செய்தால் போதும்.. உங்க ஆயுளில் 11 ஆண்டுகள் சேர்க்கலாம்..!

walking

நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உடல் செயல்பாடுகள் அவசியம். நடைபயிற்சி, ரன்னிங், சைக்கிள் ஓட்டுதல் அல்லது உடற்பயிற்சி போன்ற உடல் செயல்பாடுகளில் ஈடுபவர்களுக்கு ஆயுட்காலம் அதிகரிப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆம். உடல் செயல்பாடுகள் நமது ஆயுட்காலத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

40 வயதுக்கு மேற்பட்டவர்களில் யாரெல்லால்ம் உடல் சுறுசுறுப்புடன் இருக்கிறார்கள் அவர்கள் சராசரியாக ஐந்து ஆண்டுகள் கூடுதலாக வாழ்வார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. வாரத்தில் 150 முதல் 300 நிமிடங்கள் என்ற குறைந்தபட்ச உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாத நபர்கள் ஆயுட்காலம் குறைவதுடன், அவர்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசினில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள க்ரிஃபித் பல்கலைக்கழகம் மற்றும் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான இந்த ஆய்வு, உடல் செயல்பாடுகளின் நன்மைகள் பற்றிய முந்தைய மதிப்பீடுகளை சவால் செய்கிறது.

சி.டி.சி.யின் தேசிய சுகாதார புள்ளியியல் மையத்திலிருந்து 2017 இறப்புத் தரவை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். 40 வயதிற்கு மேற்பட்ட 36,000 அமெரிக்கர்கள் சேர்க்கப்பட்டனர், அவர்களின் உடல் செயல்பாடு அளவுகள் 2003 முதல் 2006 வரையிலான தேசிய சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனை கணக்கெடுப்பின் அடிப்படையில் அமைந்தன.

உடல் செயல்பாடுகளின் காரணமாக அவர்களின் ஆயுட்காலம் எவ்வளவு குறைக்கப்பட்டது அல்லது அதிகரித்தது என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். குழுக்களுக்கு இடையேயான ஒப்பீட்டை எளிதாக விளக்குவதற்கு, அனைத்து வகையான மிதமான மற்றும் தீவிரமான உடற்பயிற்சிகளையும் நடைப்பயிற்சி நிமிடங்களுக்கு சமமானதாக ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தினர்.

ஆய்வில் என்ன கண்டுபிடிக்கப்பட்டது? ஆராய்ச்சி செய்யப்பட்ட மக்கள்தொகையில் முதல் 25 சதவிகிதத்தினர் அனைவரும் சுறுசுறுப்பாக இருந்தால், 40 வயதிற்கு மேற்பட்ட அமெரிக்கர்கள் சராசரியாக 5.3 ஆண்டுகள் கூடுதலாக வாழலாம். அவர்களின் ஆயுட்காலம் சுமார் 84 வயது வரை உயரும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

எவ்வித உடல் செயல்பாடுகளிலும் ஈடுபடாதவர்கள், தங்கள் உடற்பயிற்சியை மிகவும் சுறுசுறுப்பான நிலைக்கு உயர்த்தினால், அவர்கள் இன்னும் 11 வருடங்கள் ஆயுளைப் பெறுவார்கள் என்பதும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இன்றைய உட்கார்ந்த வாழ்க்கை முறையில் உடற்பயிற்சி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் இந்த ஆய்வு முடிவுகள் சுட்டிகாட்டுகின்றனர். எனவே தினமும் குறைந்தது 30 முதல் 45 வரை மிதமான உடற்பயிற்சி அல்லது விறுவிறுப்பான நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இதன் மூலம் உங்கள் ஆயுட்காலத்தின் 11 ஆண்டுகள் அதிகரிக்கும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

Read More : இடுப்பு கொழுப்பை குறைப்பது முதல் குடல் புற்றுநோயை தடுப்பது வரை.. சிவப்பு அவலில் இவ்வளவு நன்மைகளா? 

English Summary

Experts have found that physical activity has a major impact on our lifespan.

Rupa

Next Post

Vitamin B 12 Deficiency : நரம்பு மண்டலம் பாதிப்பு முதல் தோல் சுருக்கம் வரை.. வைட்டமின் பி12 குறைபாட்டால் இத்தனை பிரச்சனைகள் வருமா..?  

Wed Nov 27 , 2024
From damage to the nervous system to skin wrinkles.. Is this a problem if the body lacks this vitamin?

You May Like