fbpx

வெறும் தண்ணீரை குடித்து, உடலில் இருக்கும் நோய்களை விரட்டிடலாம்.! ஜப்பானிய நீர் சிகிச்சை முறை.! 

ஜப்பானிய நீர் சிகிச்சை முறையை பயன்படுத்தி நம் உடலில் இருக்கும் பல்வேறு கோளாறுகளை நீக்கி, உடல் ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்தலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது நீர் பற்றாக்குறை தான். இதனை கருத்தில் கொண்டு மருத்துவர்கள் நம்மை அதிகப்படியாக தண்ணீர் குடிக்க அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் அதன் முக்கியத்துவத்தை நாம் கருத்தில் கொள்வதில்லை. அந்த வகையில், வெறும் தண்ணீரை இதுபோல குடித்தால் உடல் நலத்தில் எவ்வளவு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதுதான் ஜப்பானிய நீர் சிகிச்சை முறை.

அன்றாடம் காலையில் எழுந்தவுடன் அரை வெப்ப நிலையில் இருக்கின்ற நீரை குடிப்பது ஒரு ஆரோக்கியமான நடைமுறை. தூங்கி எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்துவிட்டு பல் துலக்கும் முன்பாக ஒரு கிளாஸ் நீரும், காலை உணவு எடுத்துக் கொள்வதற்கு முக்கால் மணி நேரத்திற்கு முன்பு நான்கிலிருந்து ஐந்து கிளாஸ் நீரும் குடிக்க வேண்டும். இந்த சிகிச்சை முறையினால் நம் உடலில் ஏற்படும் வளர்ச்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தி உடல் ஆரோக்கியத்தை பேணலாம். 

மேலும் இது உடல் எடையை குறைக்க உதவும். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நச்சுக்களை அகற்றுவதோடு மட்டுமல்லாமல் இயற்கை நச்சு தன்மையை உடலில் அதிகரிக்கிறது. இந்த நச்சுக்கள் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை அகற்ற உதவுகிறது. மேலும் இது புற்றுநோய், மலச்சிக்கல், உயர் ரத்த அழுத்தம் மற்றும் டைப் 2 சர்க்கரை வியாதி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு அளிப்பதாக கூறப்படுகிறது. உடலில் தேவையான அளவிற்கு நீரேற்றத்தை பராமரிப்பதால் இந்த நீர் பருகும் முறை நன்மைகளை நமக்கு வாரி வழங்குகிறது. இது மூளை செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.  

உடல் வெப்பநிலை மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. ஒற்றை தலைவலி மற்றும் சிறுநீரக கற்கள் வருவதை தடுக்கிறது. அதிலும் உடல் உழைப்பு அதிகம் செய்யும் நபர்கள் அதிகப்படியான நீர் குடிக்க வேண்டும்.  இதனால் அவர்களது உடல் சூடு அதிகரிக்காமல் தடுக்க முடியும். மேலும் அவர்களுக்கு உடலுக்கு தேவையான ஆற்றலையும் இது வழங்குகிறது. மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் அதிகப்படியாக நீர் குடிப்பதால் செரிமான மண்டலத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை தீர்க்கிறது.

Rupa

Next Post

கர்ப்பிணி பெண்களுக்கு ஆபத்தாகும் நெயில் பாலிஷ்.. என்ன காரணம் தெரியுமா..?

Fri Jan 19 , 2024
பொதுவாக உடலுக்கு பெண்கள் பலரும் பல்வேறு அழகு சாதன பொருட்கள் பயன்படுத்தி வருகிறார்கள். முகத்தை அழகுபடுத்துவது போலவே தங்கள் கைகளையும் அழகுபடுத்த நகங்களில் நெயில் பாலிஷ் உபயோகப்படுத்துகிறார்கள். இது எந்த அளவில் உடலுக்கு தீமையை ஏற்படுத்துகிறது என்பதை குறித்து பார்க்கலாம் குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் கைகளில் நெயில் பாலிஷ் போட்டுக்கொள்ளும் போது அது வயிற்றில் உள்ள குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நெயில் பாலிசியில் உள்ள இரசாயனங்கள் நம் உடலில் கலந்து […]

You May Like