fbpx

சூப்பர்…! வெறும் ரூ.70 இருந்தா போதும்… தபால் மூலம் உங்க வீட்டுக்கே தேடி வரும் பென்ஷன் சான்றிதழ்…!

இந்திய அஞ்சல் துறை, மத்திய மற்றும் மாநில அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலமாக டிஜிட்டல் முறையில் வாழ்நாள் சான்றிதழைச் சமர்பிக்கும் சேவையை தபால்காரர்கள் மூலம் வழங்கிவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற தங்கள் வருடாந்திர வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்நிலையில் நேரில் சென்று வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக, ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம், அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே, கைவிரல் ரேகையை பயன்படுத்தி, டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 மட்டும் தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி அஞ்சல்காரரிடம் ஆதார் எண், மொபைல் எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகையை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில், டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.

சென்னை நகர மண்டலத்தில் 2191 நகர்ப்புற மற்றும் கிராமப்புற அஞ்சல் அலுவலகங்கள் மூலம் 2500க்கும் மேற்பட்ட தபால்காரர்கள் மற்றும் கிராமிய அஞ்சல் ஊழியர்கள், ஆதார் மொபைல் எண்ணை புதுப்பித்தல், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு புதிய ஆதார் பதிவு செய்தல், ஆதார் சார்ந்த டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்தல் போன்ற சேவைகளை அவர்களது வீட்டிற்கே சென்று வழங்கி வருகின்றனர்.

Vignesh

Next Post

இனி மொபைல் பயனர்களுக்கும் தனி வாடிக்கையாளர் ஐடி!… டிசம்பரில் அமல்!… இணையப் பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

Wed Nov 8 , 2023
இணையப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் மொபைல் பயனர்களுக்கு தனிப்பட்ட வாடிக்கையாளர் ஐடிகளை வழங்கு திட்டத்தை கொண்டுவரவுள்ளதாகவும், இது டிசம்பவம் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று தொலைத்தொடர்புத் துறை (DoT) தகவல் தெரிவித்துள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகளை செய்துவரும் தொலைத் தொடர்பு துறை, இணையப் பாதுகாப்பை மேம்படுத்துவதும், அரசாங்க ஆதரவு நிதிப் பலன்களின் விநியோகத்தை நெறிப்படுத்துவதும் இதன் இலக்காகும் என்று தெரிவித்துள்ளது. மொபைல் வாடிக்கையாளர் ஐடி அமைப்பு, ஒரு ஐடியின் […]

You May Like