fbpx

திரைத்துறையில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன்! நினைத்து பார்த்தால் மகிழ்ச்சி – நடிகை டாப்சி

திரைத்துறையில் தான் பெற்ற வெற்றி கடின உழைப்பால் கிடைத்தது என நடிகை டாப்சி தெரிவித்துள்ளார்.

Taapsee Pannu: தனுஷ் நடித்த ‘ஆடுகளம்’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் டாப்சி. தொடர்ந்து ‘ஆரம்பம்’, ‘காஞ்சனா 2’ உட்பட பல படங்களில் அவர் நடித்துள்ளார். ஹிந்தியில் கவனம் செலுத்திய டாப்ஸி, ஷாருக்கானுடன் ’டங்கி’ படத்தில் நடித்தார்.

அதனை தொடர்ந்து, டென்மார்க்கை சேர்ந்த பாட்மிண்டன் பயிற்சியாளர் மத்யாஸ் போ என்பவரைக் கடந்த 10 வருடங்களாக டாப்சி காதலித்து வந்த நிலையில், கடந்த மாதம் ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்தை தொடர்ந்து தனது வாழ்க்கை குறித்து சமீபத்தில் பேசியுள்ளார்.

அதில், தான் தற்போது அடைந்துள்ள வெற்றி எனக்கு அதிர்ஷ்டத்தால் மட்டும் கிடைக்கவில்லை. மிகவும் கடினமாக உழைத்து தினமும் என்னை நானே உத்வேக படுத்திக்கொண்டு வாழ்க்கையில் இந்த அளவிற்கு முன்னேறியுள்ளேன் என்றார். “இப்போது நான் இருக்கும் இடத்தை நினைத்துப் பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார்.

மேலும், தனக்கு தற்போது சிறிது ஓய்வு தேவைப்படுகிறது என்றும், அதனால் திரைத்துறையில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். நல்ல கதை வந்தால் மட்டுமே நடிப்பேன், என்று கூறியுள்ளார் டாப்சி.

shyamala

Next Post

அரபிக் கடலில் 173 கிலோ போதை பொருட்களுடன் ஒரு இந்திய மீன்பிடி படகு பறிமுதல்...!

Tue Apr 30 , 2024
இந்தியக் கடலோரக் காவல்படை, குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சியில், அரபிக் கடலில் 173 கிலோ போதைப்பொருட்களுடன் ஒரு இந்திய மீன்பிடி படகு பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை வழங்கிய குறிப்பிட்ட மற்றும் நம்பகமான உளவுத் தகவல்களின் அடிப்படையில், இந்தியக் கடலோரக் காவல்படை சந்தேகத்திற்கிடமான படகை இடைமறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள், புலனாய்வுத் தகவல்களின் துல்லியத்தை […]

You May Like