தமிழர்களின் உணவு முறை நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகளை கொண்டிருக்கிறது. தென்னிந்தியாவில் பெரும்பாலும் அரிசியே முதன்மை உணவாக இருக்கிறது. அரிசியிலும் பல வகைகள் உள்ளன. இவற்றில் கைவரிசம்பா என்ற அரிசி உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரும் சத்துக்களை கொண்டிருக்கிறது.
இந்த அரிசியை ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைப்பதில் முக்கிய பங்கு வைக்கிறது. மேலும் இந்த அரசியில் நிறைந்திருக்கும் செலினியம் புற்றுநோயை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. முக்கியமாக குடல் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோயை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு இந்த அரிசிக்கு உண்டு. இவற்றில் இருக்கக்கூடிய நார்ச்சத்து செரிமான பிரச்சனைகளை சரி செய்வதோடு இரைப்பை மற்றும் குடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த அரிசியில் இருக்கக்கூடிய ஃபோலிக் ஆசிட் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் பெண்கள் கருவுறுதலில் முக்கிய பங்கு வைக்கிறது. பெண்களின் கருமுட்டை வளர்ச்சிக்கு இந்த போலிக் ஆசிட் உதவுகிறது. மேலும் இவற்றில் இருக்கக்கூடிய ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உடலின் டெஸ்டோஸ்டிரான் அளவை அதிகரிக்க செய்கிறது. இந்த டெஸ்டோஸ்டரான் ஆண்களின் இனப்பெருக்கத்திற்கு முக்கியமான ஒரு ஹார்மோன் ஆகும். இந்த ஹார்மோன் உடலின் சோர்வை போக்கி சுறுசுறுப்பை தருகிறது. பண்டைய காலங்களில் இது வயாகரா போல பயன்படுத்தப்பட்டிருக்கிறது.