fbpx

எதிர்க்கட்சி துணை தலைவர் இவர் தான்.. ஓபிஎஸ் வகிக்கும் ஒரே ஒரு பதவியையும் பறிக்க இபிஎஸ் திட்டம்..

பல சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் இடையே சென்னை வானகரத்தில் கடந்த 11-ம் தேதி, அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அதிமுக கட்சி விதிகள், கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்-ஐ நீக்குவதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்ட நிலையில், இபிஎஸ்-ஐ நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்திருந்தார்..

இதை தொடர்ந்து தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்பு மாறி மாறி முறையிட்டுள்ளது.. இபிஎஸ் முடிவு பொதுக்குழு முடிவுகளை அங்கீரிக்க வேண்டும், ஓபிஎஸ் அதை அங்கீகரிக்க கூடாது என்று கூறியுள்ளது.. இந்த சூழலில் நேற்று முன் தினம் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியில் இருந்து ஓ. பன்னீர்செல்வத்தை நீக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.. இதே போல் நேற்றும் அதிமுக எம்.எல்.ஏக்களிடம் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து ஆலோசித்ததாக தெரிகிறது..

இதனிடையே எதிர்க்கட்சி துணைத்தலைவராக வேறு யாரையாவது நியமித்தால் ஏற்கக்கூடாது என்று ஓபிஎஸ் கோரிக்கை வைத்திருந்தார்.. இதுதொடர்பான கடிதத்தையும் அவர் சபாநாயகருக்கு அனுப்பி இருந்தார்.. இதையடுத்து, எதிர்க்கட்சி துணை தலைவர் தொடர்பாக ஓபிஎஸ் அனுப்பிய கடிதம் பரிசீலனையில் உள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார். மேலும், எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து எதிர்க்கட்சி துணை தலைவர் தொடர்பாக எந்த கடிதமும் வரவில்லை என்றும் சபாநாயகர் தெரிவித்தார்..

இந்த சூழலில் எதிர்க்கட்சி தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிமுகவினரிடையே நிலவியது.. இந்நிலையில் எதிர்க்கட்சி துணைத்தலைவராக நத்தம் விஸ்வநாதன் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இதுதொடர்பான பரிந்துரையை சட்டப்பேரவை தலைவருக்கு அதிமுக தலைமை விரைவில் அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.. நத்தம் விஸ்வநாதன் தற்போது அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.. இந்த நிலையில் ஓ. பன்னீர் செல்வத்தை எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, நத்தம் விஸ்வநாதனை தேர்ந்தெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது..

Maha

Next Post

மீண்டும் உருவெடுத்த கருமுட்டை விவகாரம்..? கணவரை பிரிந்து தோழி வீட்டிற்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

Tue Jul 19 , 2022
கருமுட்டை திருட்டு மற்றும் மோசடி சம்பவங்கள் அண்மைக் காலமாக வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், மற்றுமொரு சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குடும்ப தகராறில் கணவனை பிரிந்து வாழும் பெண்ணிற்கு அடைக்கலம் தருவதாக கூறி, அவரிடம் இருந்து கருமுட்டையை கொடுக்குமாறு வலியுறுத்தி துன்புறுத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது ஈரோட்டில் நடைபெற்ற கருமுட்டை விற்பனை சம்பவத்திற்கு பிறகு வெளிவந்துள்ள மற்றொரு சம்பவம் ஆகும். சென்னை எர்ணாவூர் பகுதியில் […]
கருமுட்டை வழக்கு..! ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு சீல் வைத்தது செல்லும்..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!

You May Like