fbpx

கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி..! அடுத்தடுத்து புதிய உத்தரவுகளை பிறப்பிக்கும் பள்ளிக்கல்வித்துறை..!

கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலியாக தனியார் பள்ளிகளை முதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி, கடந்த 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து, மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் 17ஆம் தேதி வன்முறையாக மாறியது. பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி 2 முறை மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் தங்களது சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்திற்கு எடுத்துச் சென்று இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். இதற்கிடையே, மாணவி உயிரிழப்புக்கான காரணம் குறித்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி..! அடுத்தடுத்து புதிய உத்தரவுகளை பிறப்பிக்கும் பள்ளிக்கல்வித்துறை..!

மேலும், பள்ளி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், பள்ளிக்கல்வித்துறை சார்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் எதிரொலியாக பள்ளிக்கல்வித்துறை சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. நேற்று ஆசிரியர்கள் பள்ளியில் நடந்து கொள்ளும் முறைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்பட்டது. அந்த வரிசையில், தனியார் பள்ளிகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி..! அடுத்தடுத்து புதிய உத்தரவுகளை பிறப்பிக்கும் பள்ளிக்கல்வித்துறை..!

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் சரியான முறையில் உள்ளனவா? விடுதிக் கட்டடங்கள், தீ தடுப்பு ஏற்பாடுகள் உரிய அனுமதி பெற்றுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும் Residential பள்ளி கட்டடங்கள் உரிய அனுமதி பெற்றுள்ளனவா? என்பதையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்” என பள்ளிக்கல்வித்துறை தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

Chella

Next Post

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா...?

Mon Jul 25 , 2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 16,866 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 41 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 18,143 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

You May Like