fbpx

கள்ளக்குறிச்சி கலவரம்..! சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு..! டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு..!

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், நேற்று முன்தினம் வன்முறை வெடித்தது. இதில் மாணவி படித்த தனியார் பள்ளி, வாகனங்கள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். மேலும், அந்தப் பள்ளியில் படித்த மாணவர்களின் சான்றிதழ்களையும் தீக்கிரையாகின. இதனால், பள்ளி வளாகம் போர்க்களமாக மாறியது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கள்ளக்குறிச்சி கலவரம்..! சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு..! டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு..!

இந்த போராட்டத்தால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நீடித்து வருவதால், போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கலவரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மாணவி மரண வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. டிஐஜி பிரவீன் குமார் அபிநவ் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

Chella

Next Post

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு எவ்வளவு உயர்ந்துள்ளது யாருக்கெல்லாம் உயர்ந்துள்ளது..!

Tue Jul 19 , 2022
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். எட்டு வருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.27.50 உய்தற்ப்பட்டுள்ளது. 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு கொடுத்த அழுத்தம்தான், மின்கட்டண உயர்விற்கு காரணம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். ஏழை மக்களுக்கு பாதிப்பு […]

You May Like