fbpx

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு.. தந்தையின் கோரிக்கை நிராகரிப்பு..

மாணவி உடலை மறு பிரதேச பரிசோதனை செய்யும் குழுவில் தங்கம் தரப்பு மருத்துவரை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது..

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி, கடந்த 13-ம் தேதி தனியார் பள்ளி விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.. இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.. போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடியதுடன், மாணவர்களின் சான்றிதழ்களை தீ வைத்து எரித்தனர்.. இதனிடையே மாணவியின் மரணத்தில் உள்ள உண்மை கண்டறிய வேண்டும், மீண்டும் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று தந்தை ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.. இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக சிறப்பு படை அமைத்து விசாரணை நடத்தி வன்முறையாளர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்..

மேலும், பள்ளி மாணவி உடலை 3 மருத்துவர்கள் மறு பிரேத பரிசோதனை செய்யலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.. மறு உடல் கூராய்வை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும், மாணவியின் தந்தை, வழக்கறிஞர் கேசவனும் மறு பிரேத பரிசோதனையின் போது இருக்கலாம் என்றும் நீதிபதி அனுமதி வழங்கி உள்ளார்.. உடற்கூராய்வுக்கு பின் மாணவியின் உடலை பெற்றோர் எதிர்ப்பின்றி பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், மாணவியின் இறுதி சடங்கு அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.. எனினும் தங்கல் தரப்பு மருத்துவரை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க நீதிபதி சதீஷ்குமார் மறுத்துவிட்டார்.

இந்நிலையில் மாணவியின் தந்தை ராமலிங்கம், இரு நீதிபதிகளின் அமர்வு முன்பு அவசர முறையீடு செய்தார்.. அப்போது, மாணவி உடலை மறு பிரதேச பரிசோதனை செய்யும் குழுவில் தங்கம் தரப்பு மருத்துவரை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை தனி நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார்.. எனவே, இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று முறையீடு செய்தார்.. ஆனால், கிரிமினல் விவகாரங்கள் தொடர்பாக இந்த அமர்வில் விசாரிக்க முடியாது என்றும், தனி நீதிபதி உத்தரவில் மேல்முறையீடு வேண்டும் என்றால் உச்சநீதிமன்றத்தை தான் அணுக வேண்டும் என்று தெரிவித்தனர்.. இதன் மூலம் மாணவியின் தந்தை வைத்த கோரிக்கை இரு நீதிபதிகள் அமர்விலும் நிராகரிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

இலங்கையில் மீண்டும் அவசர நிலை.. தற்காலிக அதிபர் ரணில் அறிவிப்பு..

Mon Jul 18 , 2022
இலங்கயில் மீண்டும் அவசர நிலையை அறிவித்து தற்காலிக அதிபர் ரணில் விக்ரம சிங்க உத்தரவிட்டுள்ளார்.. இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தி அந்நாட்டு கடந்த சில மாதங்களாகவே தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதையடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார்.. எனினும் அதிபர் கோட்டபய ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் என்று போராடங்கள் மீண்டும் வலுப்பெற்றன.. இதையடுத்து தனது அதிகாரப்பூர்வ அதிபர் மாளிகையில் […]
அவசரநிலை பிரகடனம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நீட்டிப்பு..! இலங்கை அரசு அறிவிப்பு

You May Like