கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதியின் உயிரிழப்பைத் தொடர்ந்து பள்ளியில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இந்த கலவரம் தொடர்பாக 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கு விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.. மாணவியின் தந்தை தொடர்ந்த நீதிமன்றமும் கடும் அதிருப்தியை பதிவு செய்ததுடன், வன்முறையாளர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியது.. இந்நிலையில் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன் வீடியோ கான்பிரன்ஸ் முறையில் ஆலோசனை மேற்கொண்டார்..
இந்த சூழலில் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி செல்வக்குமார் பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலர் பனீந்திர ரெட்டி உத்தரவிட்டிருந்தார்.. மேலும் அவர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.. சென்னை திருவல்லிக்கேணி காவல்தூறை ஆணையர் பகலவன், கள்ளக்குறிச்சி எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. இதே போல் கள்ளக்குறிச்சி மாவட்ட ஸ்ரீதரும் பணியிட மாற்றப்பட்டுள்ளார்.. தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ளார். மேலும் கள்ளக்குறிச்சியின் புதிய மாவட்ட ஆட்சியராக ஷ்ரவன் குமார் ஜடாவத் நியமிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதனிடையே நீதிமன்றஅறிவுறுத்தலின் படி உயிரிழந்த மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. டிஐஜி பிரவீன் குமார் அபிநவ் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.