2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனக்கான செல்வாக்கை பறைசாற்ற அரசியல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். திருச்சி, மதுரை, சேலம், ஈரோடு என பல்வேறு இடங்களை பரிசீலித்த பிறகு, இறுதியாக விக்கிரவாண்டியை தேர்வு செய்திருக்கிறார். அங்கு வி.சாலை என்ற இடத்தில் செப்டம்பர் 23ஆம் தேதி மாநாடு நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னை மாங்காட்டில் குன்றத்தூர் வடக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டார். திமுக கூட்டத்தில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், விஜய்யை மறைமுகமாக சாடியுள்ளார். அப்போது பேசிய அவர், “கண்டவன் எல்லாம் அரசியலுக்கு வர்றான். ஒரு படத்திற்கு ரூ.200 கோடி முதல் ரூ.250 கோடி வரை வாங்குறான். உன் ரசிகர்கள் தானே. உன் மேல பாசமா தானே இருக்காங்க.
அப்படினா ரசிகர்களுக்கு இலவசமா டிக்கெட் தர வேண்டியது தானே. கொடுக்க மாட்டான். ஒரு டிக்கெட்டை ரூ.2 ஆயிரத்தை விற்பான். இவங்களா வந்து நாட்டை காப்பாத்த போறாங்க” என கடுமையாக விமர்சித்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்.
Read More : என் தந்தை தோனியை திட்டியது ஏன்..? யுவராஜ் சிங் சொன்ன அதிர்ச்சி காரணம்..!!