கர்நாடக மாநில வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காவிரியாற்றில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் உயிரிழந்த நபர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் 5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டம், கொளத்தூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கோவிந்தப்பாடியைச் சேர்ந்த ராஜா என்ற காரவடையான் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி அன்று காவிரியாற்றில் மீன்பிடிக்கச் சென்றார்கள் என்றும், அவர்கள் மீது கர்நாடக மாநில வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ராஜா என்ற காரவடையான் உயிரிழந்துள்ளார், கர்நாடக மாநில வனத்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த ராஜா என்ற காரவடையானை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கவைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.