fbpx

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட அர்ச்சகர் கார்த்திக் முனுசாமிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்…!

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்.

பாலியல் வழக்கில் சிக்கிய, சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி நேற்று கைது செய்யப்பட்டார். கோயிலுக்கு சாமி கும்பிட வந்த தன்னை வீட்டில் காரில் அழைத்துச் சென்று விடுவதாகக் கூறி தன்னிடம் அர்ச்சகர் அத்துமீறியதாகவும், மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பெண் அளித்த புகாரின் பேரில் காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இவர் மீது, விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்த நிலையில், நேற்று கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண்ணை மானபங்கம்படுத்துதல், கொலை மிரட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விருகம்பாக்கம் மகளிர் போலீசார் கார்த்திக் முனுசாமியை நேற்று கைது செய்தனர்.

Vignesh

Next Post

பள்ளிகள் திறந்ததும் இந்த தவறை செய்தால் நடத்துனர் மீது ஒழுங்கு நடவடிக்கை..!! மாணவர்கள் நிம்மதி..!!

Wed May 29 , 2024
Disciplinary action has also been taken against the conductors if they let students in uniform or holding identity cards off the bus.

You May Like