முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியரும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மருமகனுமான செல்வம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். முரசொலிக்கு கட்டுரை எழுதுவதற்காக குறிப்பு எடுத்து வைத்துவிட்டு கண் அயர்ந்த நேரத்தில் மாரடைப்பால் உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது.
அவருடைய உடல் சென்னை கொண்டு வரப்பட்டு, சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக, பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், இந்த நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி நாளிதழை கவனித்து வந்தார். சிலந்தி என்ற புனைப் பெயரில் , முரசொலி நாளிதழில் பல கட்டுரைகளை எழுதி வந்தார்.
மறைந்த முரசொலி செல்வத்தின் உடல், சென்னை கோபாலபுரத்தில் உள்ள மறைந்த முதல்வர் கருணாநிதியின் இல்லத்துக்கு கொண்டு வரப்படவுள்ளது. இதையடுத்து கோபாலபுரம் இல்லத்துக்கு துணை முதல்வர் உதயநிதி, திமுக எம்பி தயாநிதி மாறன் ஆகியோர் வந்தனர். ஏராளமான திமுக தொண்டர்களும் அப்பகுதிக்கு வந்துள்ளனர். முரசொலி செல்வத்தின் மறைவுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்கள், அரசியல் கட்சியினர், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Read more ; தேர்வு கிடையாது.. ரேஷன் கடைகளில் 2,000 காலிப்பணியிடங்கள்..!! – ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..