fbpx

“நா இல்லாம உங்களால சாதிக்க முடியாது”; சவால் விட்ட செந்தில்; கவுண்டமணி கொடுத்த பதிலடி..

முன்பெல்லாம், காமெடி என்று சொன்ன உடன் நமது நினைவிற்கு வருவது கவுண்டமணியும், செந்திலும் தான். இரட்டையர்கள் போல் ஒன்றாகவே திரையில் இருக்கும் இவர்களின் காம்போ பிடிக்காத தமிழ் சினிமா ரசிகர்கள் இருக்கவே முடியாது. இவர்களால் ஓடாத படங்கள் கூட ஓடும். கரகாட்டக்காரன், ஜென்டில்மேன் மற்றும் சின்ன கவுண்டர் என பல திரைப்படங்களில் இருவரும் ஒன்றாக நடித்து பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தனர். பொதுவாக திரையில், கவுண்டமணி தான் செந்திலை வெளுத்து வாங்குவார். ஆனால் நிஜத்தில் ஒரு நாள், செந்தில் அவர்கள் கவுண்டமணியிடம் சென்று, “நா இல்லாம உங்களால் தனியாக காமெடியில் சாதிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கவுண்டமணி, செந்தில் கூறியதை சவாலாக எடுத்துக் கொண்டுள்ளார். இதற்க்கு பிறகு, செந்திலும் கவுண்டமணி இல்லாமல் தனியாக படங்களில் நடிக்க தொடங்கினார். கவுண்டமணியும் தனியாக நடிக்கத் தொடங்கினார். ஆனால், கவுண்டமணியின் படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற அளவிற்கு செந்திலின் படங்களுக்கு வரவேற்ப்பு கிடைக்கவில்லை. அப்போது, செந்தில் தான் கூறியது மிகவும் தவறு என்று கட்டாயம் உணர்ந்திருப்பார். ஆனால், ரசிகர்கள் இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று தான் விரும்பினார்கள். அது தான், திரையரங்குகளின் உரிமையாளர்களின் வேண்டுகோளாகவும் இருந்தது. இதனால் மீண்டும் செந்திலும், கவுண்டமணியும் சேர்ந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: “நீ கூட்டிட்டு வந்த ஆட்கள் எல்லாரும் இப்பதான் கைதட்டுறாங்க”; இளையராஜாவின் பேச்சால், கூனிக்குறுகிய சூரி..

English Summary

kavundamani-won-the-challenge-by-senthil

Next Post

டீ, காபியில் நாட்டு சர்க்கரை சேர்த்தா சுகர் வராதா?? கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்..

Sat Nov 30 , 2024
does-brown-sugar-is-good-for-health

You May Like