ஆபாச வீடியோ வைரலாவது தொடர்பாக கேரள நடிகை திவ்யா பிரபா விளக்கம் அளித்துள்ளார்.
மலையாள நடிகைகள் கனி குஸ்ருதி, திவ்யா பிரபா மற்றும் இந்தி நடிகை சாயா கதம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட்’ (All We Imagine as Light). இப்படம் இந்தாண்டு நடந்த புகழ் பெற்ற திரைப்பட விழாவான கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, Grand Prix என்ற பிரிவில் விருது வென்றது.
இந்த விழாவில் பெருமை மிகு விருதாக பார்க்கப்படும் இந்த விருதை முதல் இந்திய படமாக இந்த படம் பெற்று பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படம் மேலும் சில சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளது. இந்த படம் மலையாளம், இந்தி, மராத்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தில் நடிகை திவ்யா பிரபா நடித்த ஆபாச காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. இது குறித்து தற்போது நடிகை திவ்யா பிரபா சமீபத்திய பேட்டி ஒன்றில், “நான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட போதே கேரளாவில் இருந்த சில அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு வரும் என எதிர்பார்த்தேன். கசிந்த வீடியோவை பகிர்ந்து வரும் நபர்கள் வெறும் 10% மக்கள் தான்.
அவர்களின் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. படத்திற்கு ஒப்புதல் கொடுத்த மத்திய வாரியக்குழுவில் மலையாளிகளும் இருந்தனர். ஒரு நடிகையாக எனக்கு பிடித்த கதைகளில் நடிக்கிறேன். அந்த வகையில்தான் இந்தப் படத்திலும் எனது கதாபாத்திரத்தில் பிடித்து நடித்தேன். புகழுக்காக நான் ஆபாச காட்சியில் நடித்ததாக சிலர் விமர்சனம் செய்கின்றனர். நான் பல விருதுகளை வென்றுள்ளேன். அதோடு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்களிலும் நடித்திருக்கிறேன். அதனால் ஆபாசமாக நடித்துதான் புகழ் பெற வேண்டும் என்ற நிலைமை எனக்கு இல்லை” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
Read More : சென்னைக்கு ரெட் அலர்ட்..!! அதி கனமழை கொட்டித் தீர்க்கப் போகுது..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!