மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனை வழங்கி கேரளா நீதிமன்றம் உத்தரவு போது
தனது மைனர் மகளை பலமுறை பலாத்காரம் செய்த 44 வயது தந்தைக்கு வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனை விதித்த திருவனந்தபுரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை கேரள உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உறுதி செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி கே.வினோத் சந்திரன் மற்றும் நீதிபதி ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. ஒரு தந்தை தனது மைனர் மகளை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து, மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டிய சம்பவம் தொடர்பான வழக்கு.
இந்த விசாரணையின் போது பதிலளித்த நீதிமன்றம் பழமைவாத பாரம்பரியத்திற்கு கட்டுப்பட்ட சமூகத்தில் பலாத்காரம் என்பது சமூக இழிவு மற்றும் அவமானம் போன்றது. மேலும் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த சட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள அமைக்கப்பட்டுள்ள சட்டம் ஒரே மாதிரியாக இருந்தாலும், அதில் சில சொற்பொருள் வேறுபாடு உள்ளது. இந்தியாவில், பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியமானது ஒரு கூட்டாளியின் சாட்சியத்திற்கு நிகரானதாக இல்லை. நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியத்தின் மீது மறைமுகமான நம்பிக்கை வைப்பது கடினமாக உள்ளது என தெரிவித்து இருந்தது.
இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிமன்றம், குற்றம் நிரூபணமானதால் குற்றவாளிக்கு மாவட்ட நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனையில் எந்த மாற்றமும் இல்லை என கூறி தீர்ப்பு வழங்கப்பட்டது.