பல விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றுவதில் ஆம்புலன்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த முக்கியமான அம்சத்தை உணர்ந்து, இந்தியாவின் முதல், ஏஆர் ஆம்புலன்ஸ் இன்று ( ஏப்ரல் 11) கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட உள்ளது. உதவி ரியாலிட்டி (assisted reality) ஆம்புலன்ஸ் என்ற AR ஆம்புலன்ஸ், நோயாளியுடன் வரும் மருத்துவ ஊழியர்களுக்கு அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்க உதவும். கொச்சியை சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான அபோதெகரி மெடிக்கல் சர்வீசஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது, இந்த AR ஆம்புலன்ஸை நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் தொடங்கி வைக்க உள்ளார். மேலும் இது மற்றொரு புதிய அம்சத்தைக் கொண்டுள்ளது.. இது மாநிலத்தின் முதல் 5G-சேவை உள்ள ஆம்புலன்ஸ் ஆகும்.
ஆம்புலன்ஸில் உள்ள வசதிகளில் டெலிமெடிசின் மென்பொருளும் உள்ளது, இது அவசர காலங்களில் நிபுணர்களுடன் ஆலோசனையை அனுமதிக்கும். மேலும், மருத்துவமனையிலோ அல்லது வேறு இடங்களிலோ அமர்ந்திருக்கும் பல்வேறு துறைகளில் வல்லுநர்கள் ஸ்மார்ட் கண்ணாடிகளைப் பயன்படுத்தி நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முடியும். இது கண்ணாடியில் இணைக்கப்பட்டுள்ள கேமரா மூலம் திரையில் உள்ள படங்களைப் பார்க்க உதவும், இது நோயாளியின் சமீபத்திய சுகாதார நிலையை மருத்துவர்களுக்கு வழங்கும்.
இதனால், நோயாளி நகரும் போதும், மென்பொருள் மற்றும் தொழில்நுட்பம் இரண்டும் தரவு பரிமாற்றத்திற்கு உதவும். மேலும் இதயம் மற்றும் நுரையீரல் வேலை செய்யாத நபர்களுக்கு நீண்டகால இதய மற்றும் சுவாச ஆதரவை வழங்கும் கூடுதல் உடல் சவ்வு ஆக்ஸிஜனேற்ற வசதியும் இந்த ஆம்புலன்ஸில் உள்ளது.. இந்தஆம்புலன்ஸ் ஏற்கனவே 50 நோயாளிகளுடன் 30 நாள் சோதனை ஓட்டத்தை நிறைவு செய்துள்ளது.
தாமதமான சிகிச்சையின் காரணமாக நோயாளிகளின் துன்பத்தையும், போக்குவரத்தின் போது ஏற்படும் உயிரிழப்புகளையும் குறைக்கும் நோக்கத்துடன் நதீம் என்ற மருத்துவர் இந்த அதிநவீன தொழில்நுட்பத்துடன் ஆம்புலன்ஸ் உருவாக காரணமாக இருந்துள்ளார்… இதுபோன்ற பல சம்பவங்களை நேரில் பார்த்த மருத்துவர் இரண்டு வருடங்கள் கடுமையாக உழைத்து இந்த ஆம்புலன்ஸை உருவாக்கினார். எனினும் மென்பொருள் மேம்பாட்டின் காரணமாக ஆம்புலன்ஸின் ஆரம்ப விலை ரூ.2.5 கோடியாக இருக்கும், பின்னர் அதன் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..