fbpx

Phone Call முதல் YouTube வரை..! Google I/O 2024 நிகழ்வில் வெளியான முக்கிய அறிவிப்புகள்! 

சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் நிறுவனம் அதன் வருடாந்திர டெவலப்பர்கள் மாநாட்டில் ​​இணையதள இணைப்புகளுக்கு மேலாக செயற்கை நுண்ணறிவு மூலம் வடிவமைக்கப்பட்ட பதில்களை ஆதரிக்கும் ரீடூல் செய்யப்பட்ட சேர்ச் எஞ்சினை வெளியிட்டது.

ஃபயர்பேஸ் ஜென்கிட் :

ஃபயர்பேஸ் பிளாட்ஃபார்மில் ஃபயர்பேஸ் ஜென்கிட் (Firebase Genkit) எனப்படும் புதிய அடிக்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது.  இது கோ சப்போர்ட் (Go Support) உடன் ஜாவாஸ்கிரிப்ட் / டைப்ஸ்கிரிப்ட்டில் (JavaScript / TypeScript ) ஏஐ-எனேபிள்டு ஆப்களை உருவாக்க டெவலப்பர்களுக்கு உதவும்.  மேலும் இந்த கட்டமைப்பானது ஓப்பன் சோர்ஸ் ஆக இருக்கும் மற்றும் கன்டென்ட் உருவாக்கம்,  சுருக்கம்,  உரை மொழிபெயர்ப்பு மற்றும் இமேஜ் ஜெனரேஷனிற்கு பயன்படுத்தப்படலாம் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

லேர்ன்எல்எம் :

கூகுள் நிறுவனம் லேர்ன்எல்எம்-ஐ வெளியிட்டது. இது கற்றலுக்காக “நன்றாக வடிவமைக்கப்பட்ட” ஜெனெரேடிவ் ஏஐ மாடல்களின் புதிய குடும்பமாகும். கூகுளின் டீப் மைண்ட் ஏஐ ஆராய்ச்சிப் பிரிவு (DeepMind AI research division) மற்றும் கூகுள் ரிசர்ச் ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பில் உருவான இந்த மாடல்கள் பல்வேறு பாடங்களில் மாணவர்களுக்கு “உரையாடல்” பயிற்சி அளிக்கும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

ஜெம்மா 2 அப்டேட்ஸ் :

கூகுள் நிறுவனம் அதன் ஜெம்மா 2-வில் ஒரு புதிய 27 பில்லியன் அளவுரு மாடலை (New 27-billion-parameter model) சேர்க்கும், மேலும் இந்த மாடல்களின் அடுத்த தலைமுறை இந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

யூட்யூப் வினாடி வினாக்கள் ;

இனி யூட்யூப்பில் ஏஐ-ஜெனெரேடட் வினாடி வினாக்களும் இருக்கும், இது பயனர்கள் எஜுகேஷன் வீடியோக்களை (Educational videos) பார்க்கும்போது அடையாளப்பூர்வமாக “தங்கள் கையை உயர்த்த” அனுமதிக்கும். டூலை பயன்படுத்தி, நீங்கள் கேள்விகள் கேட்கலாம், விளக்கங்களை பெறலாம் அல்லது வினாடி வினாவை தொடுக்கலாம்.

கால்களின் போது ஏற்படும் மோசடிகள் ;

கூகுள் ஒரு புதிய அம்சத்தையும் முன்னோட்டமிட்டது, இது அழைப்புகளின் போது சாத்தியமான மோசடிகள் குறித்து பயனர்களை எச்சரிக்கும். இது ஆண்ட்ராய்டின் எதிர்கால வெர்ஷனில் கட்டமைக்கப்படும் மற்றும் ஜெமினி நானோவை பயன்படுத்தி “பொதுவாக மோசடிகளுடன் தொடர்புடைய உரையாடல் முறைகளை” ரியல்டைமில் திறம்பட கேட்கும் திறனை கொண்டிருக்கும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகுள் பிளே ஸ்டோரில் வரும் மாற்றங்கள் ;

கூகுள் பிளே ஸ்டோர் ஆனது ஆப்களுக்கான புதிய டிஸ்கவரி அம்சம், பயனர்களை பெறுவதற்கான புதிய வழிகள், பிளே பாயிண்ட்ஸ்-க்கான அப்டேட்கள் மற்றும் கூகுள் பிளே எஸ்டிகே கன்சோல் (Google Play SDK Console) மற்றும் பிளே இன்டெக்ரிட்டி ஏபிஐ (Play Integrity API) போன்ற மேம்பாடுகளை பெறும்.

Read More ; ‘பொருளாதரத்தை மீட்க அரசு நிறுவனங்கள் அனைத்தும் தனியார்மயமாக்கல்’ – பாகிஸ்தான் பிரதமர் முடிவால் மக்கள் அதிர்ச்சி..!!

Next Post

Annamalai: மீனவர் நலன் காக்க உருவாக்கப்பட்ட சங்கத்தை முடக்கிய ஊழல் திமுக அரசு...!

Wed May 15 , 2024
மீனவர் நலன் காக்க உருவாக்கப்பட்ட சங்கத்தை முடக்கிய ஊழல் திமுக அரசு என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்; காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கச்சத்தீவை தாரைவார்த்தது, அதன் மூலம், நாற்பது ஆண்டுகளாக தமிழக மீனவ சகோதரர்கள் இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாகும்போதும், கொல்லப்படும்போதும், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் கூட்டணியில் இருந்தும், தமிழக மீனவர்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தது என தொடர்ச்சியாக தமிழக […]

You May Like