fbpx

பல லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை தன் வசமாக்கிய அரசர் சார்லஸ்..! சுவாரஸ்ய தகவல்..!

பிரிட்டன் அரசராக பொறுப்பேற்றுள்ள சார்லஸுக்கு, அரசர் என்ற பதவியை தாண்டி பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை கட்டுப்படுத்தும் அதிகாரமும் வசமாகியுள்ளது.

உலக வரலாற்றில் நீண்ட காலம் ராணியாக இருந்தவர், பிரிட்டன் ராணி மறைந்த இரண்டாம் எலிசபெத். இதையடுத்து அவரது மகன் சார்லஸ், அரசராக தனது 75வது வயதில் பொறுப்பேற்றுள்ளார். அரசர் பொறுப்பை தாண்டி, வலுவான வர்த்தக கட்டமைப்பை கொண்ட தொழில் நிறுவனங்களின் லகானும், சார்லஸின் கைகளுக்கு வருகிறது. அரச குடும்ப நிறுவனத்தின் சொத்துக்கள், அரண்மனைகளும் இந்த வர்த்தக பட்டியலில் இடம் பெறுகிறது. சுமார் இரண்டரை இலட்சம் கோடி ரூபாய் மதிப்புடையது ராயல் பர்ம் (Royal Firm). இந்நிறுவனத்தை விண்ட்சர் ( Windsor) அமைப்புடன், முக்கிய அரசு குடும்ப உறுப்பினர்கள் இயக்கி வருகின்றனர்.

பல லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை தன் வசமாக்கிய அரசர் சார்லஸ்..! சுவாரஸ்ய தகவல்..!

இந்த நிறுவனம் உலகளவில் வர்த்தகம் செய்யும் நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. பிரிட்டன் பொருளாதாரத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன்கள் வருவாயை அளிக்கிறது. இதைத் தவிர ராயல் பர்ம் நிறுவனத்தில் அரசர் சார்லஸ், ராணி கமிலா, இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேத், இளவரசி அன்னே, இளவரசர் எட்வர்ட், மற்றும் அவரது மனைவி சோஃபி ஆகியோர் உள்ளனர். இந்நிறுவனம் சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பிலான ரியல் எஸ்டேட் சொத்துக்களை வைத்துள்ளது.

பல லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை தன் வசமாக்கிய அரசர் சார்லஸ்..! சுவாரஸ்ய தகவல்..!

2021ஆம் ஆண்டின் படி கிரவுன் எஸ்டேட், ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய், பக்கிங்ஹாம் அரண்மனை 40 ஆயிரம் கோடி ரூபாய், தி டச்சி ஆஃப் கார்ன்வால் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடையது. தி டச்சி ஆஃப் லான்காஸ்டர் 6 ஆயிரம் கோடி ரூபாய், டாலர் கென்சிங்டன் அரண்மனை 5 ஆயிரம் கோடி ரூபாய், ஸ்காட்லாந்தின் கிரவுன் எஸ்டேட் 4 ஆயிரத்து 700 கோடி ரூபாயும் மதிப்புடையது.

பல லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை தன் வசமாக்கிய அரசர் சார்லஸ்..! சுவாரஸ்ய தகவல்..!
பக்கிங்ஹாம் அரண்மனை

அரசு குடும்பம் தனிப்பட்ட முறையில் இந்தச் சொத்துகள் மற்றும் வணிகத்தில் இருந்து லாபம் ஈட்டவில்லை என்றாலும், பிரிட்டன் பொருளாதாரத்தை உயர்த்துவதே இதன் நோக்கம். இதற்காக இந்த நிறுவனம் இலவச ஊடக விளம்பரம் மற்றும் ராயல் வாரண்ட்களைப் பெறுகிறது. கிரவுன் எஸ்டேட் என்பது பிரிட்டிஷ் அரசு குடும்பத்திற்கு சொந்தமான நிலங்கள் மற்றும் உடைமைகளின் தொகுப்பாகும். இனி மன்னர் சார்லஸின் கைகளுக்கு வர உள்ளது. கிரவுன் எஸ்டேட் 2021-22 நிதியாண்டில் 2500 கோடி ரூபாய் நிகர லாபத்தை அறிவித்தது. அரச குடும்பத்திற்குக் பிரிட்டன் அரசால் வழங்கப்படும் Sovereign Grant தொகையானது 2017-18 ஆம் ஆண்டில் 25 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

பல லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை தன் வசமாக்கிய அரசர் சார்லஸ்..! சுவாரஸ்ய தகவல்..!
பக்கிங்ஹாம் அரண்மனை

உலகமெல்லாம் தனியார் மயம் உச்சத்தில் உள்ள நிலையில், பிரம்மாண்டமான பெரு நிறுவனங்களை வெற்றிகரமாக இயக்கி, உலகின் மற்ற நாட்டு அரசுகளுக்கு முன்னுதாரணமாக உள்ளது பிரிட்டன் அரச குடும்பம் என்றால் மிகையில்லை.

Chella

Next Post

எஸ்பிஐ வங்கி பெண்களுக்கு உத்தரவாதம் இல்லாமல் ரூ.25 லட்சம் கடன் வழங்குகிறதா..? உண்மை இதோ..

Mon Sep 12 , 2022
ஏழைகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியுதவி குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வைரல் செய்திகள் வலம் வருகின்றன.. அந்த வகையில் அரசின் ‘நாரி சக்தி யோஜனா’ திட்டத்தின் கீழ், நாட்டின் அனைத்து பெண்களுக்கும் உத்தரவாதமும் இல்லாமல் வட்டியும் இல்லாமல் எஸ்பிஐ ரூ.25 லட்சம் கடனை வழங்குகிறது என்று ஒரு போலி செய்தி பரவி வருகிறது.. ஆனால் இந்த செய்தி போலி செய்தி என்பது தெரியவந்துள்ளது.. இந்திய பத்திரிகை தகவல் பணியகமான […]

You May Like