fbpx

காருக்குள் கசமுசா..!! கர்ப்பமான இளம்பெண்..!! பப்பாளியை சாப்பிட சொன்னாரு..!! பரபரப்பு புகார்..!!

கோவை மாவட்டம் ரத்தினபுரியை சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர், மாவட்ட மகளிர் போலீசில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில், ”நான் கோவையில் உள்ள ஒரு தனியார் வங்கியில், உதவி மேலாளராக வேலை பார்த்து வருகிறேன்.. எனக்கு திருமணம் செய்து வைக்க எனது பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி, கவுண்டம்பாளையத்தை சேர்ந்த 27 வயது இளைஞரை பேசி முடித்தனர். அவர் மாலத்தீவில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். எங்களுக்கு கடந்த நவம்பர் 13ஆம் தேதி, பெற்றோர்களால் நிச்சயம் நடைபெற்றது. அதன் பிறகு நாங்கள் இருவரும் செல்போன் மூலமாக பேசி பழகி வந்தோம். இதற்கிடையே, நானும், அவரும் ஆனைக்கட்டிக்கு சென்றோம். வருங்கால கணவர் என்ற நம்பிக்கையில் அவருடன் இயல்பாக பழகினேன். அங்குள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கினோம்..

அங்கு அவர் மது அருந்தினார்.. என்னையும் மது குடிக்க கட்டாயப்படுத்தினார். நான் வேண்டாம் என்றேன். தொடர்ந்து என்னை கட்டாயப்படுத்தியதால் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு அங்கிருந்து காரில் கிளம்பினோம்.. வரும் வழியில் திடீரென காரை நிறுத்தினார். என்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால், நான் கர்ப்பமானேன். உடனே இதுகுறித்து நான் செல்போன் மூலமாக அவரிடம் சொன்னேன்.. உடனடியாக என்னை திருமணம் செய்யும்படியும் கேட்டுக்கொண்டேன். அதற்கு அவர் இப்போது என்னால் திருமணம் செய்ய முடியாது. அதனால், நீ பப்பாளி, அன்னாசி பழங்களை சாப்பிட்டு கருவை கலைத்து விடு என்றார்.. இதைக்கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு அவர் சொன்னபடி கருவை கலைத்தேன்.

அதன்பிறகு அவர் ரூ.5 லட்சம் பணம் மற்றும் 10 பவுன் நகைகள் வரதட்சணையாக கொடுத்தால் தான் உன்னை திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லிவிட்டார்.. இதற்கெல்லாம் அவருடைய அப்பா, அம்மா உடந்தையாக இருந்தனர்.. அதனால், என்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி விட்டு, இப்போது திருமணம் செய்ய மறுக்கும் அவர் மீதும், அவரது பெற்றோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அப்பெண் புகாரில் கூறியிருக்கிறார்.. இந்த புகாரின் அடிப்படையில் இளைஞர் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chella

Next Post

’வாரத்தில் 3 நாட்கள் அலுவலகம் வந்தால் போதும்’..!! இன்ஃபோசிஸ் நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Wed Apr 19 , 2023
கொரோனா வந்தாலும் வந்தது எல்லா ஐடி ஊழியர்களுக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம் என்ற வரப்பிரசாதம் கிடைத்தது. கடந்த ஓராண்டாக கொரோனா பாதிப்புகள் அதிக அளவு இல்லாததால், பல்வேறு ஐடி கம்பெனிகள் அந்த கம்பெனியின் ஊழியர்களை மீண்டும் ஆபீஸ்க்கு வர வைத்து விட்டார்கள். கொரோனா வைரஸ் மற்றும் அடுத்தடுத்த சமூக விலகல் விதிமுறைகள் வீட்டிலிருந்து வேலை செய்வதில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொடர்ந்து […]

You May Like