fbpx

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து திடீர் ராஜினாமா…! பின்னணி என்ன..?

ஆந்திர பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து கிடுகு ருத்ர ராஜு ராஜினாமா செய்தார்..

ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையான ஷர்மிளா தெலங்கானாவில் ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா என்ற கட்சியை நடத்தி வருகிறார். ஒருங்கிணைந்த ஆந்திர முதல்வராக இருந்த மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகளும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா, காங்கிரஸ் கட்சியில் கடந்த 4-ம் தேதி இணைந்தார். அக்கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா கட்சியையும் காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துள்ளார்.

தெலுங்கு மக்களுக்கு மட்டுமல்லாமல் தன் வாழ்நாள் அனைத்தையும் காங்கிரஸ் கட்சிக்காக அர்ப்பணித்த தனது தந்தையின் வழியை பின்பற்றி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், நமது நாட்டின் மிகப்பெரிய மதசார்பற்ற கட்சியாக காங்கிரஸ் இன்னும் இருக்கிறது என பேசிய இருந்தார். அவருக்கு ஆந்திர காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி கொடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ஆந்திர பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து கிடுகு ருத்ர ராஜு ராஜினாமா செய்தார். அண்மையில் கட்சியில் இணைந்த முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, ஆந்திர காங்கிரஸ் கட்சியின் தலைவராக விரைவில் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

Vignesh

Next Post

உங்களிடம் Fastag இருந்தா KYC-யை ஜனவரி 31-க்குள் அப்டேட் செய்ய வேண்டும்...! இல்லை என்றால் சிக்கல்...

Tue Jan 16 , 2024
உங்கள் வாகனத்தில் Fastag இருந்தால், அதன் KYC விதிமுறையை ஜனவரி 31க்குள் அப்டேட் செய்ய வேண்டும். மின்னணு கட்டண வசூல் அமைப்பின் செயல்திறனை அதிகரிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஜனவரி 31 க்குப் பிறகு, KYC விதிகளை நிறைவேற்றாத ஃபாஸ்டேக்குகள் வங்கிகளால் செயலிழக்கப்படும் அல்லது தடைப் பட்டியலில் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், FASTag இல்லாமல், நீங்கள் டோலுக்கு இரட்டை வரி செலுத்த வேண்டியிருக்கும். இந்திய தேசிய நெடுஞ்சாலை […]

You May Like