fbpx

இனி எல்லாம் ஆன்லைன்..! நிலங்களை அளவீடு செய்ய புதிய இணையதளம் அறிமுகம்…! அசத்தும் தமிழக அரசு..‌!

நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்று இருந்த நிலையை மாற்றி, பொதுமக்களின் வசதிக்காக ‘எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும்’ நில அளவை செய்ய https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

இப்புதிய சேவையின் மூலம், பொதுமக்கள் நிலஅளவை செய்ய விண்ணப்பிக்கும் பொருட்டு வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பொதுமக்கள் நிலஅளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், இணைய வழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நிலஅளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும், நிலஅளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நிலஅளவர் கையொப்பமிட்ட ‘அறிக்கை/வரைபடம்’ ஆகியவற்றை மனுதாரர் https://eservices.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Vignesh

Next Post

இயற்கை எழில் கொஞ்சும் பச்சை மலை… அடுத்த சம்மர் ட்ரிப் இங்க பிளான் பண்ணுங்க.! அட்டகாசமான டூரிஸ்ட் ஸ்பாட்.!

Tue Nov 21 , 2023
இதுவரை சுற்றுலா செல்வதற்கு மலை வாசஸ்தலங்கள் என்றால் அது ஊட்டி கொடைக்கானல் ஏற்காடு என்றுதான் சென்று இருப்போம். இவை இல்லாமல் புதியதாக ஒரு இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால் அது கிழக்கு தொடர்ச்சி மலைகளில் இருக்கும் பச்சை மலை. இது திருச்சி, பெரம்பூர் மற்றும் சேலம் மக்களுக்கு அருகில் இருக்கக்கூடிய ஒரு சுற்றுலாத்தளமாகும். இது திருச்சியில் இருந்து 103 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த மலை, கடல் மட்டத்திலிருந்து 3500 அடி […]

You May Like