fbpx

இன்று முதல் 20-ம் தேதி வரை கற்றல் விளைவு திறனறி தேர்வு நடத்த வேண்டும்…! பள்ளிக் கல்வி துறை அதிரடி உத்தரவு…!

இன்று முதல் 20-ம் தேதி வரை கற்றல் விளைவு, திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வுகளை நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்; அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுத்தும் நோக்கத்தில் மாநில மதிப்பீட்டுப் புலம் பெயரில் திறனறி தேர்வுகள் பள்ளிக்கல்வித் துறை சார்பில் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நடப்பாண்டு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 6 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வுகள் நடத்தப்பட்டன.

அதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு இன்று முதல் 20-ம் தேதி வரை கற்றல் விளைவு, திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வுகளை நடத்த வேண்டும். இந்த தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் https://exam.tnschools.gov.in/ எனும் மாநில மதிப்பீட்டு புலம் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றப்படும். தேர்வு நடைபெறும் நாளுக்கு ஒருநாள் முன்பாக மதியம் 2 முதல் அடுத்த 23 மணி நேரத்துக்குள் அந்த வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மாத ஊதியம் வாங்கும் நபர்கள் இனி இதை செய்ய முடியாது...! வருமான வரித்துறை அதிரடியான நடவடிக்கை...!

Tue Oct 17 , 2023
வருமான வரித்துறை இ – வெரிஃபிகேஷன் என்ற சாப்ட்வேரை அறிமுகம் செய்துள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது, ஒருவர் தனது வருமானம் மற்றும் செலவுகள் குறித்த முழு விவரங்களையும் அளிக்க வேண்டும். இதில், முதலீடு மற்றும் சேமிப்பின் முழுத் தொகை பற்றிய தகவலை கட்டாயம் கொடுக்க வேண்டும். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகள் மூலம் ஐடிஆர்-ஐ தாக்கல் செய்ய வருமான வரித்துறை மக்களை அனுமதிக்கிறது. ஆன்லைன் முறையில் ஐடிஆர் […]

You May Like