ஜார்க்கண்ட் மாநிலம் மகேஷ்வர் கிராமத்தை சேர்ந்தவர் நஜிபுல் ஷேக். இவரது மனைவி ஷகினா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இருவருமே பிழைப்பு தேடி சென்னைக்கு வந்துள்ளனர். சென்னை மேடவாக்கத்தில் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். அவர்களுடன் சித்தாரா என்ற இளைஞனும் வேலை பார்த்து வந்துள்ளார். இவர், ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்.
ஒரே இடத்தில் வேலை பார்த்ததால், ஷகீனாவுக்கும் சித்தாராவுக்கும் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. கொஞ்ச நாளிலேயே இந்த உறவு படுஸ்டிராங் ஆகிவிட்டது. இவர்களது விவகாரம், கணவர் ஷேக்குக்கு தெரியவந்துள்ளது. இதனால், மனைவியை கண்டித்துள்ளார். மனைவியும் திருந்திவிடுவார் என்று கணவரும் நம்பி இருந்தார்.
ஆனால், சம்பவத்தன்று வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வந்துள்ளார் கணவர். அப்போது, 2 குழந்தைகள் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர். அதனால், ஷகினா வெளியே எங்காவது போயிருப்பார் என்று நினைத்தார். நீண்ட நேரம் ஆகியும் வராமல் போக, பல இடங்களில் மனைவியை தேடினார் கணவர். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால், திடீரென சந்தேகம் வந்து, சித்தாராவை தேடியுள்ளார். அந்த இளைஞனையும் காணவில்லை. அப்போதுதான், தன்னையும், குழந்தைகளையும் தவிக்க விட்டுவிட்டு சித்தாராவுடன் மனைவி ஓடிவிட்ட தகவல் தெரியவந்தது.
இதனால், 2 குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு பள்ளிக்கரணை போலீஸ் ஸ்டேஷனுக்கு போனார்.. இளைஞருடன் ஓடிப்போன தன்னுடைய மனைவியை மீட்டுத் தர வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அந்த இருவரையும் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.