ஒரு தொழிலதிபராக இருந்து அதில் உழைத்து முன்னேறி அதன் பிறகு சினிமாவுக்குள் என்ட்ரி தந்தவர் லெஜண்ட் சரவணன் அருள். அவர் தற்போது தன் படத்தை எந்த ஓடிடி நிறுவனத்துக்கும் விற்பதில்லை என லெஜண்ட் சரவணன் அதிரடி முடிவு எடுத்துள்ளார்.
தந்தை சில்லரை வியாபாரம் செய்து வந்த நிலையில், அதனை பெரியளவில் உயர்த்த வேண்டும், எல்லா பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்க வேண்டும் என்ற முனைப்புடன் இவர் பரம்பரை தொழிலை திறம்பட செய்தார். இளம் வயதிலேயே பிசினஸ் நுணுக்கங்களை தெரிந்தவர்தான் அருள்.
இந்தியாவிலேயே பெரிய மற்றும் அனைத்து பொருட்களும் இருக்கும் வகையில் மல்ட்டி ஸ்டோர் கடையை கொண்டுவந்து, மக்களை திரும்பி பார்க்க வைத்தவர் தான் சரவணன் அருள். வழக்கம் போல் ஒரு பெரிய நடிகரை வைத்து விளம்பரம் செய்தால், அது நன்றாக இருக்குமே என்று பல பிரபலங்களை அணுகியுள்ளார். ஆனால், அதில் யாரும் பதிலை உறுதியாக சொல்லாமல் போனதாலே தன் கடை விளம்பரங்களில் தானே நடித்து வருகிறார்.
தற்போது லெஜண்ட் சரவணன் தனி ஹிரோவாக அறிமுகமாகிய திரைப்படம் “தி லெஜண்ட்” என்பதாகும்.இத்திரைப்படத்தில் பாலிவுட் ஹீரோயின், ஹரிஷ் ஜெயராஜ் இசை, விவேக் உள்ளிட்ட பல்வேறு பெரிய நடிகர்கள் இருக்கிறார்கள். இப்படி அனைத்து நட்சத்திர பட்டாளம் வைத்து அவரே அப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார்.
இத்திரைப்படம், திரையரங்கில் ரிலீஸ் ஆன போதே பெரும் ட்ரோல்களையும், சர்ச்சைகளையும் சந்தித்தது. மேலும், படம் ஓடிடியில் வெளியானால் இன்னும் அதிகம் ட்ரோல்களை சந்திக்கலாம் என்பதால், இப்போது லெஜண்ட் சரவணன் ஒரு அதிரடி முடிவெடுத்து எடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, லெஜண்ட் திரைப்படத்தை எந்த ஓடிடி நிறுவனத்துக்கும் விற்பதில்லை என அவர் முடிவெடுத்து இருப்பதாக தெரியப்படுகிறது.