fbpx

உத்தரகாண்ட் ஆணையத்தால் 14 பதஞ்சலி தயாரிப்புகளின் உரிமங்கள் ரத்து!

பதஞ்சலி நிறுவனம் தயாரிக்கும் 14 ஆயுர்வேத மருந்துகளின் உற்பத்தி உரிமத்தை உத்தராகண்ட் மாநிலத்தின் மருத்து ஒழுங்குமுறை ஆணையம் ரத்து செய்துள்ளது.

பிரபல யோக குருவான பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் டூத்பேஸ்ட், சோப்புகள், தேன், ஷாம்பு போன்றவற்றை விற்பனை செய்து வருகிறது. ஆனால், இந்த பொருட்களுக்கான விளம்பரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அதாவது, பதஞ்சலி நிறுவனம் தீராத நோய்களையும் குணப்படுத்துவதாகவும், அலோபதி மருத்துவ முறைக்கு எதிரான கருத்துக்களை கொண்ட விளம்பரங்களை செய்வதாகவும் சர்ச்சை எழுந்தது.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பதஞ்சலி நிறுவனர் ராம்தேவ் மற்றும் நிர்வாக இயக்குனர் பாலக்ரிஷ்ணா ஆகியோர் பொது மன்னிப்பு கோர உத்தரவிட்டது. வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட பொதுமன்னிப்பு கோரும் விளம்பர நகலை பதஞ்சலி நிறுவன வழக்கறிஞர் தாக்கல் செய்தார். 

அந்த விளம்பரத்தில், ’நாங்கள் நீதிமன்றத்தின் மீது மிகப் பெரிய மரியாதை கொண்டுள்ளோம். மீண்டும் தவறு செய்ய மாட்டோம்’ என்று கூறியிருந்தார் ராம்தேவ். இதை ஏற்க மறுத்த நீதிமன்றம், உஙக்ள் தயாரிப்பு பொருட்களின் விளம்பரத்தைப் போல மன்னிப்பு விளம்பரமும் பெரிய அளவில் வெளியிடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதையாடுத்து முழு பக்க மன்னிப்பு விளம்பரம் வெளியிடப்பட்டது. பொய்யான விளம்பரங்களின் மீது மத்திய அரசும், உத்தராகண்ட் அரசும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் 14 மருந்துகளுக்கு தடை விதித்தும், மருந்துகள் தயாரிப்பதற்கான திவ்யா பார்மசி மற்றும் பதஞ்சலி நிறுவனங்களின் உரிமத்தையும் ரத்து செய்து உத்தராகண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது. பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிராக இந்திய மருத்துவ கவுன்சில் தாக்கல் செய்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Next Post

ஜம்மு காஷ்மீரில் விடாது பெய்யும் கனமழை! 4 பேர் உயிரிழப்பு.. 350 குடும்பத்தினர் வெளியேற்றம்..

Tue Apr 30 , 2024
ஜம்மு – காஷ்மீரில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் மூன்று சிறுவர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அங்கிருந்த 350 குடும்பத்தினர் மீட்கப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர், ஜம்மு – காஷ்மீரில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவால், 3 சிறுவர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆடுகள் உள்ளிட்ட ஏராளமான கால்நடைகள் உயிரிழந்துள்ளன. […]

You May Like