fbpx

நடிகைகள் குறித்து பொது இடங்களில் அசிங்கமாக பேசிய நடிகர்களின் பட்டியல்.! மூத்த நடிகரின் மகனுக்கு முதலிடம்.!

தமிழ் சினிமாவில் பெண்களுக்கு எதிராக தொடரும் கொடுமைகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. சமீபத்தில் லியோ பட விழாவில் பேசியிருந்த மன்சூர் அலிகான் திரிஷா குறித்து ஆபாசமாகவும் அசிங்கமாகவும் பேசியதாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. பழைய படங்களில் வருவதைப் போன்று நடிகைகளை கற்பழிக்கும் காட்சிகள் இல்லாதது மிகவும் வருத்தமாக இருந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

இது திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் மகளிர் அமைப்புகளும் மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்திருந்தனர். இதுபோன்று அருவருக்கத்தக்க வகையில் மன்சூர் அலிகான் மட்டும் பேசவில்லை. இதற்கு முன்பு பல நடிகர்களும் அவ்வாறு பேசியிருக்கின்றனர். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி பங்கேற்பாளராக இருக்கும் கூல் சுரேஷ் இதுபோன்று பேசியிருக்கிறார்.

அவர் ஒரு இசை வெளியீட்டு விழாவில் அந்த நிகழ்ச்சியின் பெண் தொகுப்பாளரை மேடையிலேயே தப்பான முறையில் அணுகினார். அதற்கு அந்தப் பெண் முறைக்கவே மேடையில் வைத்து அவரிடமும் மன்னிப்பு கேட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ரோபோ சங்கர் ஒருமுறை ஹன்சிகா குறித்து அவதூறு ஏற்படுத்தும் வகையில் ஆபாசமாக பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மூத்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகனுமான நடிகர் ராதாரவி, நயன்தாரா குறித்து பேசிய அசிங்கமான பேச்சு தமிழ் திரை உலகில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அவர் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு தான் அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் என்பதும் முக்கியமான ஒன்று.

மேலும் சமீபத்தில் ஜெயிலர் பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த்தும், தமன்னா குறித்து கூறிய கருத்துக்களும் இது போன்றவை என்று சினிமா விமர்சகர் பிஸ்மி கருத்து தெரிவித்துள்ளார்.

Kathir

Next Post

ரேஷன் கார்டு பயனாளர்களே! உடனடியாக இந்த விஷயத்தை பண்ணுங்க… கால அவகாசம் அறிவிப்பு.!

Wed Nov 22 , 2023
ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரது ஆதார் எண்ணையும் இணைப்பதற்கான கால அவகாசத்தை டிசம்பர் மாதம் இறுதி வரை நீட்டித்து புதிய உத்தரவு வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்பு குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்களை இணைப்பதற்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டு இருந்தது. இதற்கான கால அவகாசம் ஏற்கெனவே முடிந்துவிட்டது.  தற்போது பொது மக்களின் நலன் கருதி இந்த கால அவகாசம் டிசம்பர் மாதம் இறுதி வரை […]

You May Like