fbpx

கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!! எப்போது தெரியுமா..? ஆட்சியர் அறிவிப்பு..!!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு வரும் 27ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருள்மிகு நடராஜர் திருக்கோவில் (அருள்மிகு சபாநாயகர் திருக்கோயில்) ஆருத்ரா தரிசனம் நடைபெறும் நாளான டிசம்பர் 27ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், ஜனவரி மாதத்தில் விடுமுறை நாளான ஜனவரி 6ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. மேலும், உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படும் டிசம்பர் 27ஆம் தேதி அவசர அலுவல்களை கவனிக்கும் பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகங்கள் அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படும் என அறிவிக்கப்படுகிறது” என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

விஜய் போட்ட உத்தரவு..!! சென்னையில் டிசம்பர் 14ஆம் தேதி இலவச மருத்துவ முகாம்..!!

Tue Dec 12 , 2023
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் 25 இடங்களில் வரும் டிச.14ஆம் தேதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிக்ஜாம் புயல் காரணமாக, பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் நலனை பாதுகாக்கும் வகையிலும், மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் டிசம்பர் 14ஆம் தேதி […]

You May Like