கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய மாஸ் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக சிவகார்த்திகேயன் படத்தில் பணிபுரிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் ‘புறநானூறு’ என்ற படத்தில் சூர்யா நடிக்கவிருந்தார். ஆனால், சில காரணங்களால், அப்படத்தில் இருந்து சூர்யா விலகியதாக கூறப்படுகிறது. இதனால், தற்போது இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் கதையின் திருப்புமுனையை ஏற்படுத்தும் கேரக்டரில் நடிக்க லோகேஷ் கனகராஜிடம் சுதா கொங்கரா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதற்கு அவரும் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, சிவகார்த்திகேயன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் ‘புறநானூறு’ திரைப்படத்தில் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
‘புறநானூறு’ படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அப்போது சிவகார்த்திகேயன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து நடிப்பது குறித்த தகவலும் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதனால், சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Read More : வங்கதேசத்துக்கு புதிய பிரதமர்..? பழிக்கு பழி..!! யார் இந்த முகமது யூனுஸ்..? வெளியான பரபரப்பு தகவல்..!!