fbpx

வரலட்சுமி திருமணத்தில் யாருன்னு பாருங்க..!! குஷ்பு பின்னாடி பாலகிருஷ்ணா செய்த காரியம்..!!

நடிகை வரலட்சுமி சரத்குமார் மும்பையை சேர்ந்த நிக்கோலாய் சச்தேவ் என்பவரை ஜூலை 2ஆம் தேதி திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்தை தொடர்ந்து ஜூலை 3ஆம் தேதியான நேற்று மாலை சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட திருமண வரவேற்பு விழாவில் தென்னிந்திய பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். இதில் பாலகிருஷ்ணா, ஷோபனா, வெங்கடேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் நடிகை குஷ்புவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

’கல்கி 2898 ஏடி’ படத்தில் மரியம் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஷோபனா, வரலட்சுமி சரத்குமார் திருமண விழாவுக்காக நேற்று சென்னை வந்த நிலையில், நடிகை குஷ்புவை சந்தித்தார். அப்போது, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ் உள்ளிட்ட டோலிவுட் நடிகர்களும் சந்தித்து தனியாக ரீயூனியன் ஒன்றை நடத்தி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

அதிலும், குஷ்பு மற்றும் ஷோபனாவுக்கு பின்னாடி பாலகிருஷ்ணா நின்று கொண்டு ஷோபனாவை கலாய்ப்பது போல பரதநாட்டிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தி வருகிறது. பாலகிருஷ்ணன் நடிப்பில் வெளியான வீர சிம்ஹா ரெட்டி படத்தில் வரலட்சுமி சரத்குமார் தங்கையாக வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருந்தார். அந்த நட்பு காரணமாக வரலட்சுமி சரத்குமார் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாலகிருஷ்ணா பங்கேற்றுள்ளார். சினிமா பிரபலங்களின் அணிவகுப்பாகவே நேற்று நடைபெற்ற ரிசப்ஷன் நிகழ்ச்சி களைகட்டியது.

Read More : PF-இல் இருந்து கூடுதல் ஓய்வூதியம் பெற வேண்டுமா..? எப்படின்னு தெரிஞ்சிக்கோங்க..!!

English Summary

The photo of Balakrishna standing behind Khushbu and Shobana and stroking Shobana is making the fans laugh.

Chella

Next Post

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.6,000..!! இன்னும் இந்த வேலையை முடிக்கலையா..? சிறப்பு முகாம்..!! சூப்பர் வாய்ப்பு..!!

Thu Jul 4 , 2024
It is said that the 18th installment will be credited to farmers' bank accounts in the last week of August or the first week of September.

You May Like