முகமது நபி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த பாஜகவின் நுபுர் ஷர்மாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது..
பாஜக முன்னாள் உறுப்பினர் நுபுர் ஷர்மா முகமது நபிகள் தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.. மேலும் பல மாநிலங்களில் நுபுர் ஷர்மாவை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போரட்டங்களும் நடைபெற்றன.. அவற்றில் பல போராட்டங்கள் வன்முறையில் முடிந்தன.. மேலும் பல்வேறு வளைகுடா நாடுகளும் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்தன.. இதனிடையே நுபுர் ஷர்மா மீது பல புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில் அவர் இன்னும் கைது செய்யப்படாமல் இருக்கிறார்..
அந்த வகையில் நுபுர் ஷர்மாவுக்கு எதிராக மேற்குவங்கத்தில் பல இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.. ஏற்கனவே 2 காவல்நிலையங்களில் இருந்து நுபுர் ஷ்ர்மாவுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவர் ஆஜராகவில்லை.. இதையடுத்து கொல்கத்தா காவல்துறையினர் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது..
முன்னதாக பல்வேறு மாநிலங்களில் தனக்கு எதிரான வழக்குகளை டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்று நுபுர் ஷர்மா உச்சநீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நுபுர் ஷர்மாவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.. மேலும் நுபுர் ஷர்மாவும், அவரது வாரத்தைகளும் ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது என்று தெரிவித்தனர்..
நுபுர் ஷர்மா மீது ஏராளமான எஃப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டும் டெல்லி காவல்துறை அவரை கைது செய்யவில்லை என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.. தொலைக்காட்சியில் தோன்றி ஒட்டுமொத்த நாட்டு மக்களிடமும் நுபுர் ஷர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும்.. நாட்டில் தற்போது நடந்து கொண்டிருக்கும் அனைத்து சம்பவங்களுக்கும் நுபுர் ஷர்மா ஒருவர் மட்டுமே பொறுப்பு என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..