குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக அரசு தொடர்ந்து விதிகளை மாற்றி வருகிறது. 2009 ஆம் ஆண்டில், ‘ஆதார் அட்டைத் திட்டம்’ அமல்படுத்தப்பட்டதன் மூலம், நாட்டில் ஆதார் அட்டைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. நீங்கள் எந்த ஒரு அரசு திட்டத்தில் பலன் பெற வேண்டும் என்றாலும் தற்பொழுது ஆதார் என்பது கட்டாயமாகப்பட்டுள்ளது.
ஆதார் இப்போது நடைமுறையில் எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிகரித்து வரும் தேவை காரணமாக, இளைஞர்களுக்கும் நீல நிற ஆதார் அட்டைகளை அரசாங்கம் வழங்கத் தொடங்கியுள்ளது. உங்கள் ஆதார் அட்டை காணாமல் போய்விட்டது மற்றும் உங்களிடம் ஆதார் எண் அல்லது பதிவு ஐடி இல்லை என்றால், கவலைப்பட வேண்டாம்; நீங்கள் ஆதார் எண் இல்லாமல் பதிவிறக்கம் செய்யலாம்.
எப்படி பதிவிறக்கம் செய்து…?
உங்கள் தொலைந்த ஆதார் அட்டையை மீட்டெடுக்க, https://uidai.gov.in/ என்ற இணையதளத்திற்குச் செல்லவும். அதைத் தொடர்ந்து, ‘Get Aadhaar’ என்ற ஆப்ஷன் இருக்கும். அடுத்ததாக ஆதார் பெறுவதற்கு கீழே ஸ்க்ரோல் செய்யும் போது, ‘Retrieve Lost’ மற்றும் ‘Forgotten EID/UID’ ஆகிய விருப்பங்கள் இருக்கும் அதை கிளிக் செய்து முதலில் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்தால் உங்கள் ஆதாரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.