fbpx

தற்கொலை செய்து கொண்ட காதலர்கள்.. சிலைக்கு திருமணம் செய்து வைத்த நெகிழ்ச்சி..!

குஜராத் மாநிலம் தாபி நகரில் வசித்து வந்த கணேஷும், ரஞ்சனாவும் காதலித்து வந்தனர். ஆனால் இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் மனம் உடைந்தனர். 

விரக்தியில் இருந்த இருவரும் தற்கொலை முடிவை நோக்கி காதல் ஜோடி தூக்கில் தொங்கி தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். இருவரும் இறந்து ஆறு மாதங்கள் ஆன நிலையில், காதல் ஜோடி சேர்ந்து வாழ முடியாததற்கு நாங்கள் தான் காரணம் என குடும்பத்தினர் மிகவும் மனம் வருந்தியுள்ளனர். 

இதனை தொடர்ந்து கணேஷ் மற்றும் ரஞ்சனாவிற்கு குடும்பத்தினருக்கு சிலை வைத்தனர். மேலும் சிலைக்கு முறைப்படி திருமணம் செய்து வைத்தனர். இதனை பற்றி அவர்களிடம் கேட்ட போது, உயிரிழந்த காதலர்களின் ஆன்மா சாந்தியடையவே செய்தோம் என்று கூறியுள்ளார். 

மேலும் உயிருடன் இருந்த போது அவர்களின் ஆசையை நிராகரித்த நிலையில், இப்போது அந்த ஆசையை நாங்கள் நிறைவேற்றுவதற்காக இதனை செய்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கணேஷ் தங்களுக்கு தூரத்து உறவினர் என்றும், அவர் திருமணத்திற்கு தயாராகவில்லை என்ற காரணத்தினாலும் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததாக ரஞ்சனாவின் தாத்தா கூறியுள்ளார்.

Rupa

Next Post

உறங்கி கொண்டிருந்த சிறுவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி.. உதட்டில் முத்தம் குடுத்த முதியவர்..!

Thu Jan 19 , 2023
கேரள மாநில பகுதியில் உள்ள கண்ணூர் மாவட்டத்தின் தலச்சேரி பகுதியில் மம்முட்டி என்கிற 76 வயதான முதியவர் பள்ளூர் பகுதியில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்து வருவது வழக்கமாக இருந்துள்ளார்.  சம்பவம் நடைபெற்ற அன்று அந்த உறவினர் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அச்சமயத்தில் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த 17 வயது சிறுவனை முதியவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து உதட்டை கடித்துள்ளார்.  இதனா‌ல் அந்த சிறுவன் தூக்கத்தில் […]
ட்ரீட் கொடுப்பதாகக் கூறி இளம்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநர்..!! திருவள்ளூரில் அதிர்ச்சி..!!

You May Like