பெண்கள் சுயதொழில் செய்து தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள கூட்டுறவு வங்கிகளில் 5% வட்டியில் விரைந்து கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கணவனை இழந்த மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 5 சதவீதம் வட்டியில் விரைந்து கடன்களை வழங்க வேண்டும் என்று கூட்டுறவு வங்கி அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டி என்பதோடு அதிக கெடுபிடிகள் இல்லாததால் பலரும் கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்குகின்றனர். தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், பயிர்க்கடன், நகைக்கடன் வழங்குவதுபோல், சுயதொழில் செய்ய கடன் வழங்கப்படுகிறது.

அந்தவகையில், கணவனை இழந்த மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சுயதொழில் செய்து தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள ஏதுவாக கூட்டுறவு வங்கிகளில் 5 சதவீதம் வட்டியில் கடன் வழங்கும் திட்டம் கடந்த 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில், ஒருவருக்கு அதிகபட்சம் 25 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படுகின்றது. இந்நிலையில், கணவனை இழந்த மற்றும் கைவிடப்பட்ட பெண்கள் சுயதொழில் செய்து தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள கூட்டுறவு வங்கிகளில் 5% வட்டியில் விரைந்து கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.