fbpx

“மேடம் நோட் பண்ணிக்கோங்க.. ’15 AIIMS’-களும் ஒரு செங்கல்லும்” நிதியமைச்சரின் உரைக்கு AIIMS தமிழக எம்.பி பதிலடி.!

2024 ஆம் வருடத்திற்கான மத்திய அரசின் பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை தாக்கல் செய்து உரை நிகழ்த்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 10 ஆண்டுகளில் கல்வி மற்றும் மருத்துவத்துறையில் செய்த சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். மத்திய அமைச்சரின் பட்ஜெட் உரைக்கு மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது கண்டனத்தை ‘X’ வலைதளத்தில் பதிவு செய்து இருக்கிறார்.

பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரில் 2024 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நடப்பு பட்ஜெட் மற்றும் கடந்த ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சாதனைகள் குறித்து 58 நிமிடங்கள் உரையாற்றினார். இந்த உரையின் போது மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட தேசிய கல்விக் கொள்கை குறித்தும், மாணவர்களின் கல்வியில் பாரதிய ஜனதா அரசு எடுத்து வரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்து சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக பேசிய அவர் கடந்த 10 வருட தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் நாடு முழுவதும் ‘7 IIT’, 7 ‘IIM’ மற்றும் 15 AIIMS மருத்துவமனைகள் திறக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டப்பட்டு ஒன்பது வருடங்கள் ஆன நிலையில் இதுவரை எந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2015 ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கிறது.

இந்நிலையில் நிதியமைச்சரின் பாராளுமன்ற உரைக்கு சமூக வலைதளத்தில் தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார் சு.வெங்கடேசன். இது தொடர்பாக தனது ‘X’ வலைதளத்தில் பதிவு செய்திருக்கும் அவர் ” நிதி அமைச்சர் பதினைந்து எய்ம்ஸ் மருத்துவமனைகள் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவித்திருக்கிறார். அதில் ஒரு சிறு திருத்தம் செய்ய கேட்டுக்கொள்கிறேன். 15 எய்ம்ஸ் மருத்துவமனைகளும் ஒரு செங்கல்லும் என பதிவு செய்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் மட்டும் நாட்டப்பட்டிருப்பதை விமர்சித்திருக்கிறார்.

Next Post

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யுமாம்..!! வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

Thu Feb 1 , 2024
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (பிப்.1) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாகவும் […]

You May Like