fbpx

தமிகழமே…! இன்று முதல் மேல் முறையீடு செய்தவர்களுக்கு ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை…!

தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தில் ஏற்கனவே 1,08,49,242 பேர் பயன்பெறுகின்றனர். இதில் சேலம் மாவட்டத்தில் மட்டும் 5.17 இலட்சம் மகளிர் பயன்பெற்றுள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் சென்னைக்கு அடுத்து அதிகளவிலான மகளிர் சேலம் மாவட்டத்தில் பயன்பெற்றுள்ளனர்.

மேலும், தற்பொழுது தமிழ்நாட்டில் மேல் முறையீடு செய்த 7,35,058 குடும்ப தலைவிகள் பயன்பெறும் வகையில் இன்று முதல் வங்கி கணக்கில் ரூ.1,000 வழங்கப்படவுள்ளது. இதன்மூலம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1 கோடியே 13 இலட்சம் பயனாளிகள் பயன் பெறவுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று சென்னை கலைவானர் அரங்கில் நடைபெறும் விழாவில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட தொகையினை வழங்கவுள்ளார்கள்.

அதனைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட தொகை வழங்கும் விழா நடைபெறவுள்ளது. அந்தவகையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் இன்று சேலம் மாவட்டத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.

Vignesh

Next Post

திரை ரசிகர்களுக்கு ஷாக்..‌! இன்று முதல் 30 ரூபாய் வரை டிக்கெட் விலை அதிகரிப்பு...! அனுமதி கொடுத்தது அரசு...!

Fri Nov 10 , 2023
புதுவையில் உள்ள திரையரங்குகளில் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. புதுவையில் இயங்கி வரும் திரையரங்குகளில் கட்டணத்தை உயர்த்த அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி குறைந்தபட்சம் 10 ரூபாய் முதல் அதிகபட்சமாக 30 ரூபாய் வரை டிக்கெட் விலை அதிகரித்துள்ளது. 2020 அக்டோபர் 15 முதல் திரையரங்குகள் திறக்கப்படும்போது, மக்கள் நலன் கருதி புதுவையில் டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. ரூ.120 டிக்கெட் ரூ.100 ஆகவும், ரூ.100 டிக்கெட் ரூ.75 […]

You May Like