கடந்த வாரம் மகாராஜா படத்தை சீனாவில் ரிலீஸ் செய்திருந்தனர். 40 ஆயிரம் திரையரங்கங்களில் வெளிவந்த இப்படம், 5 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மகாராஜா படம் சீனாவில் 5 நாட்களில் ரூ. 4.15 கோடி வசூல் செய்துள்ளது.
இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமாக வெளிவந்தது மகாராஜா திரைப்படம். ஒரு குப்பைத்தொட்டியை கருப்பொருளாக எடுத்துக்கொண்டு படத்தை கையாண்ட இயக்குநர் நித்திலன், ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் கொடுத்து கிளைமேக்ஸில் ரசிகர்கள் எல்லோருடைய மனதையும் வென்றிருந்தார். படத்தில் நடத்திருந்த விஜய் சேதுபதி, நட்டி, முனிஷ்காந்த், அருள்தாஸ், சிங்கம் புலி, பாய்ஸ் மணிகண்டன், பாரதிராஜா, மம்தா மோகன் தாஸ், அனுராக் கஷ்யப், அபிராமி உள்ளிட்ட எல்லோரும் தங்களுடைய சிறந்த நடிப்பை கொடுத்து படத்திற்கு உயிரூட்டியிருந்தனர்.
திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டுக்களையும் பாக்ஸ் ஆஃபிஸில் 100 கோடிக்கு மேல் வசூலையும் வாரி குவித்த மகாராஜா திரைப்படம், ஓடிடி-ல் வெளியான பிறகு அதிகப்படியானவர்களால் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற சாதனையையும் படைத்து பான் இந்தியா திரைப்படமாக உருமாறியது. இந்தியாவில் மட்டுமல்ல சீனாவிலும் மகாராஜா திரைப்படம் கடந்தவாரம் வெளியானது.
சீன மொழியில் யின் குவோ பாவோ யிங் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் நாடு முழுவதும் வியக்க வைக்கும் வகையில் 40,000 திரைகளில் வெளியானது. இவ்வளவு பிரமாண்டமான ரிலீஸால், ஒரு சிலிர்ப்பான அனுபவமாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 40 ஆயிரம் திரையரங்கங்களில் வெளிவந்த இப்படம், 5 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மகாராஜா படம் சீனாவில் 5 நாட்களில் ரூ. 4.15 கோடி வசூல் செய்துள்ளது.
சீனாவில் வெளியான இந்திய சினிமாக்களில், ரஜினியின் 2.O திரைப்படம் 48,000 திரைகளை கொண்டிருந்த நிலையில், இரண்டாவது அதிகபட்சமாக 40,000 திரைகளில் மகாராஜா வெளியானது. அடுத்தடுத்த இடத்தில் பாகுபலி 2 (18,000 திரைகள்), தங்கல் (9000 திரைகள்) முதலிய திரைப்படங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Read more ; டெல்லியில் பதிவான ஜப்பானிய மூளைக்காய்ச்சல்.. அறிகுறிகள் என்னென்ன?