தூத்துக்குடியில் போலீசாரை வெட்டி விட்டு தப்பிச் செல்லும் என்ற கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய நபரை துப்பாக்கியால் சுட்டு பிடித்திருக்கிறது காவல்துறை. பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி தூத்துக்குடியில் பட்ட பகலில் நடைபெற்ற கொலை சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. தூத்துக்குடியைச் சார்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் அவரது கடைக்கு முன்பாக பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த ஜெயப்பிரகாஷ் என்பவரை பிடிக்க காவல்துறையினர் தீவுரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் அவரிருக்கும் இடத்தை பற்றி ரகசிய தகவல் அறிந்ததை அடுத்து அவரை சுற்றி வளைத்து கைது செய்ய முயற்சி செய்துள்ளது காவல்துறை. அப்போது பயங்கர ஆயுதங்களுடன் காவல் துறை அதிகாரிகளை வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்றிருக்கிறார் ஜெயபிரகாஷ். இந்தச் சம்பவத்தில் தப்பி ஓட முயன்ற ஜெயபிரகாஷை அவரது காலில் சுட்டு பிடித்திருக்கிறது காவல்துறை. காலில் குண்டடிப்பட்ட ஜெயப்பிரகாஷ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் வெட்டியதில் படுகாயம் அடைந்த காவல்துறை உதவி ஆய்வாளர் மற்றும் ஒரு காவலர் ஆகியோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனைக்கு வந்த மாவட்ட டிஎஸ்பி விசாரணை நடத்தினார்.