மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார்.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் நெற்றியின் நடுவில் ஆழமான வெட்டு காயத்துடன் முகத்தில் ரத்தம் வழியும் நிலையில் மருத்துவமனை படுக்கையில் சிகிச்சை பெறும் புகைப்படங்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிட்டது. அவர் விரைந்து குணமடைய தங்களது பிரார்த்தனை வேண்டும் என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டது. இந்த காயம் எப்படி ஏற்பட்டது என்ற விவரம் சொல்லப்படவில்லை.
மம்தா பானர்ஜி, விரைந்து குணமடைய வேண்டுமென பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் தெரிவித்தனர். இந்த நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் முதல்வர் மம்தா இருப்பார் என சொல்லப்படுகிறது.