திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில், உப்பரபாளையத்தில் வசித்து வந்தவர், மணிகண்டன். இவருக்கு பல இடங்களில் பெண் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் கொல்கத்தா மாநிலத்தில் இருந்த அவரது உறவினரான நந்தினி என்பவரை வரவழைத்து கடந்த 8 வருடங்கள் முன்பு திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், நான்கு நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் வேலைக்கு சென்ற நந்தினி, வீடு திரும்பியது போது, தனது 2 வயது குழந்தையை காணவில்லை.
2வது குழந்தை குறித்து நந்தினி அவரது மூத்த மகளிடம் கேட்டுள்ளார். அப்போது சிறுமி, அப்பா கடைக்கு கூட்டிச் சென்றுள்ளார் என கூறியுள்ளார். இதனால், இருவரும் திரும்பி வந்து விடுவார்கள் என நந்தினி நினைத்துள்ளார். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் கணவனும் குழந்தையும் திரும்ப வரவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் பதறிப்போன நந்தினி, அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால், நந்தினி மணியின் சொந்த ஊரான வடலூரில் வசிக்கும் அவரது குடும்பத்தினருக்கு போன் செய்துள்ளார்.
அப்போது ஊரில் உள்ள மணிகண்டனின் உடன் பிறந்த அண்ணனின் மனைவியான விஜியும் காணவில்லை என கூறியுள்ளனர். இதையடுத்து, இவர்களின் குடும்பத்தினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, கணவனையும், குழந்தையையும் மீட்டு தரக்கோரி நந்தினி ஆவடி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். ஆனால் 5 நாட்களாகியும் இதுவரை குழந்தை கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த நந்தினி தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேலும், போலீசார் அலட்சியமாக குழந்தையை கண்டுபிடிப்பதில் காலதாமதம் செய்வதாக குற்றச்சாட்டியுள்ளார்.