fbpx

“இந்த வயசுல உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா”; மனைவியை ஆசையாக பார்க்க சென்ற கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியைச் சேர்ந்தவர் 49 வயதான முகமது கனி. மீன் வியாபாரம் செய்து வரும் இவருக்கு, 40 வயதான சர்மிளா பானு என்ற மனைவியும், திருமணமான 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் முகமது கனிக்கும் ஷர்மிளா பானுவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு, கணவன் மனைவி இருவரும் பிரிந்து விட்டனர். முகமது கனி, செங்கிப்பட்டியில் தனியாக வசித்து வருகிறார். ஆனால் ஷர்மிளா பானு, திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த ஜான் பாஷா என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், முகமது கனி தனது மனைவி ஷர்மிளா பானுவை பார்க்க வேண்டும் என்று போதையில் சுப்பிரமணியபுரம் சென்றுள்ளார். அப்போது ஷர்மிளா பானு, தனது 2வது கணவன் ஜான் பாஷாவுடன் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முகமது கனி, அவரது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற முகமது கனி, அருகில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியால் ஜான் பாஷா மற்றும் ஷர்மிளா பானுவையும் குத்தியுள்ளார். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், முகமது கனிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் குறித்து கேகே நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயம்பட்ட 3 பேரையும் மீட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Maha

Next Post

’ஷூட்டிங் அப்புறம் பாத்துக்கலாம்’..!! இந்தியா - பாகிஸ்தான் போட்டியை நேரில் காணும் ரஜினி..!!

Thu Oct 12 , 2023
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில், இந்திய அணி அக்டோபர் 8ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணியுடன் டெல்லியில் விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அடுத்த போட்டியில் அக்டோபர் 14ஆம் தேதி, அகமதாபாத்தில் […]

You May Like